மஞ்சள்: பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த மஞ்சள், சருமத்தில் உள்ள எண்ணெய் தன்மையை குறைக்க உதவுகிறது. இதற்கு, இரவு தூங்க செல்வதற்கு முன் ஒரு ஸ்பூன் மஞ்சளில் சிறிது பாலை ஊற்றி முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். பின்னர், அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவாகும். மஞ்சளில் உள்ள குர்குமின் சருமத்தில் உற்பத்தியாகும் எண்ணெய் பசையை குறைக்கும் என 2018ம் ஆண்டு காஸ்மெடிக் டெர்மட்டாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
உப்பு: ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, முகத்தில் ஸ்ப்ரே செய்து வர, சருமத்தில் உள்ள எண்ணெய் பசை படிப்படியாக குறைவதாக கூறப்பட்டுள்ளது. ஸ்ப்ரே செய்யும் போது கண்களில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
எலுமிச்சை சாறு: ஆயில் ஸ்கின் உள்ளவர்கள், எலுமிச்சை பழ சாறுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து காட்டன்களை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இந்த கலவையில் ஊறவைத்து ஃபிரிட்ஜில் வைத்து விடுங்கள். பின்னர், இந்த உருண்டைகளை பயன்படுத்தி முகத்தில் மசாஜ் செய்தால் சருமம் ஈரப்பதமாக இருப்பதோடு எண்ணெய் பசையும் கட்டுப்படுத்தப்படும்.
சோள மாவு: முகத்தை நன்றாக கழுவிய பின்னர், சோளமாவில் சிறிது தண்ணீர் கலந்து முகத்தில் தடவ வேண்டும். இதனை 15 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து கழுவி வர, முகத்தில் உள்ள எண்ணெய் பசை முற்றிலுமாக குறையும்.
தக்காளி: தக்காளியில் உள்ள வைட்டமின் சி சருமத்தில் உற்பத்தியாகும் அதிகப்படியான ஆயிலை குறைக்க உதவுகிறது. இதற்கு, இரண்டு துண்டு தக்காளியை முகத்தில் தடவி மசாஜ் செய்து 15 நிமிடங்களுக்கு பின் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இப்படி செய்து வர, சருமத்தில் ஏற்படும் எண்ணெய் பசை இயற்கையாகவே குறையும்.
இதையும் படிங்க:
பளபளக்கும் கண்ணாடி சருமம் வேண்டுமா? இந்த விதையில் தயார் செய்யும் ஃபேஸ் பேக் அப்ளை செய்ங்க!
இயற்கையான முறையில் முகம் பளபளக்க இந்த பழம் போதும்..5 நிமிடத்தில் இன்ஸ்டண்ட் க்ளோ நிச்சயம்!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.