தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று செய்தியாளர்களை சந்திக்கும் சுனிதா வில்லியம்ஸ்! நேரலை எத்தனை மணிக்கு? - Sunita williams press meet in space - SUNITA WILLIAMS PRESS MEET IN SPACE

Sunita Williams press meet from space: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று (செப்.13) அமெரிக்க நேரப்படி (EDT) பிற்பகல் 2.15 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 11.45 மணிக்கு) விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி வில்மோர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் (Credits- ANI)

By ANI

Published : Sep 13, 2024, 9:01 PM IST

Updated : Sep 13, 2024, 10:23 PM IST

வாஷிங்டன் டி.சி (அமெரிக்கா):கடந்த ஜூன் 5ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து நாசா மற்றும் போயிங் நிறுவனம் இணைந்து, போயிங் ஸ்டார்லைனர் (Boeing Starliner) எனப்படும் சோதனை விண்கலத்தை விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (International Space Station) அனுப்பியது. இந்த சோதனை முயற்சியானது, மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் அபூர்வ முயற்சியாகும்.

இதையும் படிங்க:விண்வெளியில் குளிக்கணுமா? 300 நாட்களை எப்படி சமாளிப்பார் சுனிதா வில்லியம்ஸ்?

இந்த சோதனை விண்கலனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக விஞ்ஞானியான புட்ச் வில்மோர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நாசா மற்றும் போயிங் நிறுவனத்தின் திட்டப்படி பார்த்தால், இந்த சோதனை விண்கலன் ஜூன் 15ஆம் தேதியன்று பூமியை வந்தடைந்து இருக்க வேண்டும்.

ஆனால் வரவில்லை காரணம் விண்கலனில் ஹீலியம் கசிவுகள் ஏற்பட்டு, உந்துதல் பிரச்னை உருவாகியுள்ளது. இதனால் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திலேயே தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் நாசா பல்வேறு மீட்பு முயற்சியில் இறங்கியுள்ளது. நாசா கூறுவதை வைத்து பார்த்தால், அந்த விண்கலன் 2025ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் பூமிக்கு வர வாய்ப்புள்ளது. அதாவது கிட்டத்தட்ட 300 நாட்களுக்கு மேலாக விண்வெளியிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஸ்டார் லைனர் திரும்பும் பயணத்திற்குத் தகுதியற்றதாகக் கருதப்படும் சூழலில், NASA நான்கு உறுப்பினர்களைக் கொண்ட 'க்ரூ 9 டிராகன் குழுவினரை' விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த மிஷன் SpaceX Crew 9 என அழைக்கப்படும் நிலையில், அந்த விண்கலத்தை செப்டம்பர் 2024இல் ஏவி, பிப்ரவரி 2025க்குள் வில்யம்ஸ் மற்றும் வில்மோரை பூமிக்கு திரும்ப அழைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி வில்மோர் இன்று (செப்.13) அமெரிக்க நேரப்படி 2.15 PM EDTக்கும் இந்திய நேரப்படி இரவு 11.45க்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நாசா விண்வெளி நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.

Last Updated : Sep 13, 2024, 10:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details