ஹைதராபாத்:நமது சமையலறையில் மூலப்பொருளாக இருக்கும் இலவங்கப்பட்டை உணவிற்கு சுவை கொடுப்பது மட்டுமல்லாமல் நீரிழிவை கட்டுப்படுத்துகிறது எனப் பரவலாக பேசப்பட்டு வருவது உண்மைதானா? இலவங்கப்பட்டைக்கும் சர்க்கரை நோயிற்கும் என்ன சம்பந்தம்? அதன் பன்புகள் என்ன? என்பதை விரிவாக காணலாம்.
இலவங்கப்பட்டை பயன்கள்:
- இலவங்கப்பட்டை ஃபிளாவனாய்டுகள், தியாமின்,இரும்புச்சத்து போன்ற பல சத்துக்களை உள்ளடக்கியுள்ளது
- ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டது
- செரிமானத்தை மேம்படுத்துகிறது
- உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது
- உயர் இரத்த அழுத்தத்தை போக்க உதவியாக இருக்கிறது
- பல்வலி, ஈறு வலிக்கு சிறந்த மருந்தாகும்
- தினமும் 1/4 டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுப்படும் என உணவியல் நிபுணர் டாக்டர் ஸ்ரீலதா கூறுகிறார்.
எப்படி எடுத்துக்கொள்வது?:
- தினமும் காலை மற்றும் மாலையில் 1/4 ஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை தண்ணீரில் கொதிக்கவைத்து குடித்து வந்தால், இன்சுலின் அளவு அதிகரித்து, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைகிறது.
- சர்க்கரை நோயாளிகள் காலை மற்றும் மாலையில் இலவங்கப்பட்டை தேநீரை குடிப்பதன் மூலம் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- குறிப்பாக, டைப் 2 நீரிழிவு நோயளிகளுக்கு இரத்த அளவைக் கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை பயனுள்ளதாக இருக்கிறது என்று கலிஃபோர்னியா ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
- டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 543 நபர்களுக்கு, ஒரு நாளைக்கு 120 மில்லிகிராம் முதல் 6 கிராம் வரை இலவங்கப்பட்டை பொடி உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
- மற்றவர்களுக்கு வழக்கமான மாத்திரைகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மாத்திரையை உட்கொண்டவர்களை விட இலவங்கப்பட்டையை உட்கொண்டவர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டது.