ETV Bharat / state

2-வது நாளாக தொடரும் ஆலோசனை... பிரசாந்த் கிஷோருடன் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா சந்திப்பு! - PRASHANT KISHOR

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் நேற்று தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று (பிப்.11) கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர், விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா (கோப்புப்படம்)
பிரசாந்த் கிஷோர், விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா (கோப்புப்படம்) (credit - ANI, ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2025, 5:15 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று (பிப்.10) சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை நடத்தினார். இரண்டரை மணி நேரம் நடந்த அந்த சந்திப்பில் அரசியல் நிலைபாடுகள், தேர்தல் பிரச்சார பணிகள் முன்னெடுப்பு குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் உடன் இருந்தார்.

இந்த நிலையில், இன்று (பிப்.11) சென்னை பனையூரில் உள்ள தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இல்லத்தில் பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையின் போது தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சியின் நிர்வாகி ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் மூன்று மணி நேரம் ஆலோசனை நடந்தது.

மேலும் இந்த இரண்டு தினமாக பிரசாந்த் கிஷோருடன் நடந்து வரும் ஆலோசனை கூட்டமானது ஆதவ் அர்ஜுனா ஏற்பாட்டில் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தவெகவின் அடுத்த கட்ட உட்கட்டமைப்பு வளர்ச்சிகள், கட்சியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், தேர்தல் பிரச்சார வியூகங்களை எப்படி முன்னெடுப்பது குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: தைப்பூசத்திற்கு வாழ்த்து சொன்ன விஜய்... வானதி சீனிவாசன் வேதனை... ஏன்?

மேலும், நேற்று தவெக தலைவர் விஜய்யுடன் பிரசாந்த் கிஷோர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் தங்கள் கட்சியின் வளர்ச்சி மற்றும் மக்களுக்கான செயல் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் பிரசாந்த் கிஷோர் அக்கட்சி நிர்வாகிகளுக்கு எவ்வாறு தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்ள வேண்டும்? மாவட்டவாரியாக கட்சியை எவ்வாறு மேம்படுத்துவது? கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என்ன மாதிரி வியூகங்களை கையாள வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பிரசாந்த் கிஷோருடன் இன்று ஆலோசனை மேற்கொண்ட தவெக முக்கிய நிர்வாகிகள் நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்திற்கு சென்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.