ETV Bharat / health

மாடுகளை பாதிக்கும் பெரியம்மை (Lumpy virus) நோயிற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு! CDSCO-வின் ஒப்புதலை பெற்றது! - LUMPY SKIN DISEASE VACCINE

கறவை மாடுகள் மற்றும் எருமை மாடுகளை பாதிக்கும் பெரியம்மை நோயினை தடுக்கும் BIOLUMPIVAXIN தடுப்பூசி CDSCO அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : Feb 11, 2025, 10:30 AM IST

ஹைதராபாத்: விலங்கு சுகாதார தடுப்பூசிகளை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணை நிறுவனமான பயோவெட் (Biovet), கறவை மாடுகள் மற்றும் எருமை மாடுகளுக்கு ஏற்படும் தோல் கட்டி நோய்/ பெரியம்மை நோயினை (lumpy skin disease- LSD) தடுக்க தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. பயோலம்பிவேக்சின் (BIOLUMPIVAXIN) என பெயரிடப்பட்ட இந்த தடுப்பூசியிற்கு மத்திய மருந்து தரநிலைகள் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) உரிமத்தை வழங்கியுள்ளது.

மூன்று ஆண்டுகளாக பல ஆராய்ச்சி செய்து உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று பாரத் பயோடெக்கின் துணை நிறுவனம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மாடுகளுக்கு தோல் கட்டி நோய் பரவி 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நோய் பாதிப்பால், குஜராத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல, கடந்த 2024ம் ஆண்டு, தமிழ்நாட்டில் பரவலாக குறிப்பாக கன்றுகளுக்கு இந்த பெரியம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. அதன்படி, இந்த நோயினை தடுக்க உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, CDSCO உரிமம் பெறுவது நமது நாட்டில் கால்நடைகள் மற்றும் சுகாதார மேம்பாட்டில் ஒரு முக்கியமான படியாகும் என்று பாரத் பயோடெக்கின் நிர்வாகத் தலைவரும் பயோவெட்டின் நிறுவனருமான டாக்டர் கிருஷ்ணா யெல்லா கூறியுள்ளார்.

மேலும், இந்த தடுப்பூசிக்கு இனி இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருக்காது எனவும் கர்நாடகாவின் மல்லூரில் உள்ள அதன் பிரிவில் பயோவெட் ஆண்டுதோறும் 50 கோடி டோஸ் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்று அவர் கூறினார்.

2 லட்சம் மாடுகள் உயிரிழப்பு! : இந்த தோல் நோய் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 2 லட்சம் கால்நடைகளைக் கொன்றுள்ளது. இந்த தடுப்பூசியை கறவை மாடுகளுக்கு செலுத்தினால், எல்எஸ்டி நோயின் தீவிரம் குறைந்து பால் உற்பத்தி அதிகரிக்கக்கூடும் என்று பயோவெட் வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் விளைவாக, கிராமப்புற பொருளாதாரம் பயனடையும் என்று தெரிவித்தனர்.

லம்பி வைரஸ் என்றால்?: கால்நடைகளில் தோல் கட்டி நோய் கேப்ரிபாக்ஸ் வைரஸால் ஏற்படுகிறது. இது ஆடு அம்மை மற்றும் செம்மறி அம்மை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வைரஸ் ஆகும். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சல் மற்றும் தோலில் கொப்புளங்கள் ஏற்படும். இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்கள் மற்றும் பூச்சிகள் அவற்றைக் கடிக்கும்போது, ​​அவற்றிலிருந்து அதிக இரத்தம் வெளியேறும். சில நாட்களுக்குள், எடை இழப்பு மற்றும் பால் மகசூல் குறைகிறது.

கூடுதலாக, சுவாசம் மற்றும் உமிழ்நீர் சுரப்புகளும் அதிகரித்து, கால்நடைகளின் மரணத்திற்கு வழிவகுக்கிறது. இதற்கு இன்னும் சிகிச்சை இல்லை என்றாலும், கால்நடைகளை நோயிலிருந்து விடுவிக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. கால்நடைகளில் ஏற்படும் இந்த கொடிய நோய் (லம்பி நோய்) உலகம் முழுவதும் உள்ள பாலூட்டிகளைப் பாதித்து வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: வாய்ப்புண் பாடாய்படுத்துகிறதா? உங்க டூத்பேஸ்டில் இந்த நச்சு ரசாயணம் இருக்கானு பாருங்க!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.