ETV Bharat / health

நல்ல நண்டு வாங்குவது எப்படி? சுவையும் ஆரோக்கியமும் அள்ள இதை ஃபாலோ பண்ணுங்க! - HOW TO BUY CRAB

ஆண் நண்டை விட பெண் நண்டில் சதை அதிகமாக இருக்கும். நண்டு சாப்பிடுவதால் மூட்டு வலி பிரச்சனை நீங்குகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Freepik)
author img

By ETV Bharat Health Team

Published : Feb 11, 2025, 3:47 PM IST

கடல் உணவுகளில் மீன் வகைகளை காட்டிலும் அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டது நண்டு. ஆனால், இங்கு பெரும்பாலோனோர் வீடுகளில் அடிக்கடி நண்டு சமைக்காததால் அதன் சுவையும் மனமும் பலருக்கு பிடிப்பது இல்லை. சிக்கன், மட்டன் , மீன்களை போல பலரது வீடுகளில் நண்டு வாங்க மாட்டார்கள். அதற்கு காரணம் நல்ல நண்டா எப்படி வாங்குவது? அதை எப்படி சமைப்பது? போன்ற கேள்விகள் தான்.

ஆனால், நண்டில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரிந்தால், நண்டு வாங்காத நீங்களே அடிக்கடி வாங்கி சமைக்க துவங்குவீர்கள். அந்த வகையில், சதை நிறைந்த நல்ல நண்டை எப்படி வாங்குவது மற்றும் அதில் உள்ள நன்மைகள் என்ன என்பதை இந்த கட்டுரை மூலம் தெரிந்து கொள்வோம்..

நண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

  • மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை நண்டு சாப்பிடுவது, மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. மூளை சிறப்பாக செயல்படவும் நரம்பு மண்டல செயல்பாடுகளுக்கு இது உதவியாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், நண்டில் குறைந்த கலோரிகள் உள்ளதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு நண்டு நல்ல உணவாக இருக்கும்.
  • குறைவான கொழுப்பு உள்ளதால், பக்கவாதம், மாரடைப்பு போன்ற நோய்களிலிருந்து பாதுகாத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இதய நோயாளிகளுக்கு நண்டு மிகச்சிறந்த உணவாக இருக்கிறது.
  • நண்டு இறைச்சியில் நிறைந்திருக்கும் குரோமியம், இரத்த சர்க்கரை அளவு, இன்சுலின் அளவு ஆகியவற்றை குறைக்க உதவுகிறது. கூடுதலாக, டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் அளவை பராமரிக்கவும் காயங்களை ஆற்றும் தன்மையை கொண்டுள்ளது. இருப்பினும், இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைந்த அளவில் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: அரிசியில் வண்டு வராமல் இருக்க 'இந்த' பொருள் போதும்..ஒரு வருடமானலும் பிரஷ்ஷாக இருக்கும்!
  • நண்டில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வைக்கு உதவுகிறது. மேலும், இதிலுள்ள ரெட்டினால், பீட்டா கரோட்டின், ரெட்டினியோக் அமிலம் ஆகியவை கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. கண்புரை மற்றும் கருவிழிச் சிதைவு போன்றவற்றை தடுப்பதிலும் உதவுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)
  • நண்டில் உள்ள கால்சியம் எலும்பு தேய்மான பிரச்சனைகளுக்கு அருமருந்தாக இருக்கிறது. குறிப்பாக, முடக்குவாதத்தை தவிர்க்கவும், இரத்த சுத்திகரிப்புக்கு பேருதவி செய்கிறது என NCBI அதன் ஆய்வில் தெரிவித்துள்ளது. நண்டுகளில் உள்ள செலீனியம், உடலில் உள்ள திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுகிறது.
  • நண்டில் வைட்டமின் ஏ, பி12, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் புரதம், தாமிரம்,செலீனியம், பாஸ்பரஸ் போன்ற கனிமத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. மேலும், கொழுப்புகளும் கலோரிகளும் குறைந்த அளவில் உள்ள. கர்ப்பிணிகள் மருத்துவர் அறிவுரை இல்லாமல் நண்டு சாப்பிடக்கூடாது.

நல்ல நண்டு வாங்குவது எப்படி?:

சமைப்பதற்கு உயிருடன் உள்ள நண்டை வாங்குவது நல்லது. செத்த நண்டுகள் சில மணி நேரங்களில் கெட்டுவிடும். அதேபோல, பெரிய அளவிளான நண்டுகளை வாங்குவதை விட நடுத்தர அளவிளான நண்டு வாங்குவது அதிக சுவையை கொடுக்கும். பவுர்ணமிக்கு 2 நாட்களுக்கு முன் நண்டு வாங்கினால் கறி அதிகமாகவும் ருசியாகவும் இருக்கும். ஆண் நண்டுகளை விட பெண் நண்டில் அதிக சதை இருக்கும். ஆண் நண்டில் நகங்கள் தான் அதிகமாக இருக்கும்.

ஆண் நண்டு, பெண் நண்டு கண்டறிவது எப்படி?: ஆண் நண்டில் வால் நீளமானதாக இருக்கும். இதுவே பெண் நண்டில் வால் அகலமானதாக இருக்கும். வாங்கும் போது நண்டை தூக்கி பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: சமையலை ஈஸியாக்கும் 7 கிச்சன் டிப்ஸ்...நோட் பண்ணிக்கோங்க!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.