ETV Bharat / international

"மனிதகுலத்தின் தலையெழுத்தை எழுதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்" - பாரிஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை! - PM MODI AI SUMMIT PARIS

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள கிராண்ட் பலாய் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் குறித்த உச்சி மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்த பாரிஸ் உச்சி மாநாட்டில் உரையாற்றும் பிரதமர் மோடி
ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்த பாரிஸ் உச்சி மாநாட்டில் உரையாற்றும் பிரதமர் மோடி (AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2025, 3:37 PM IST

பாரிஸ்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த உச்சி மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகின்றனர்.

பாரிஸில் உள்ள கிராண்ட் பலாய் அரங்கில் நடைபெறும் இம்மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, "இன்றைய நவீன யுகத்தில் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூகம் என அனைத்து நிலைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்த தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் வேலையிழப்புகள் ஏற்படும் என்ற அச்சம் உலக அளவில் நிலவி வருகிறது. ஆனால் ஒர் புதிய தொழில்நுட்பத்தால் மனிதனின் பணி வாய்ப்புகள் பறிபோகாது. மாறாக பணியின்தன்மை மாறும் என்பதுடன், புதிய வேலைவாய்ப்புகளும் பெருகும் என்பதுதான் இதுவரை வரலாறு நமக்கு உணர்த்திவரும் உண்மை.

கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பயன்பாடு பல லட்சக்கணக்கானோரின் வாழ்வில் வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது என்பதுடன், நிலையான வளர்ச்சிக்கு இத்தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆரம்ப கால கட்டத்தில் நாம் உள்ளோம். இந்த நவீன தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மனிதனின் வாழ்க்கையை காக்கும் வகையிலும், வாழ்க்கை தரத்தை உயர்த்தும் விதத்திலும் தான் இருக்கும்.

எனவே, இத்தொழில்நுட்பத்தால் மனிதனின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று யாரும் அஞ்ச தேவையில்லை. ஏனெனில் மனிதனின் எதிர்காலத்தை அவனை தவிர வேறு யாராலும் சிறப்பாக கட்டமைக்க முடியாது. தமது வாழ்க்கையின் வெற்றிக்கான சாவி மனிதனின் கைகளில்தான் உள்ளது. வாழ்வில் வெற்றி பெறுவதற்கான பொறுப்புணர்வுடன் நாம் செயல்பாட்டாலே போதும். அந்த உணர்வே நம்மை சிறப்பாக வழிநடத்தும்.

இந்த நூற்றாண்டில் மனிதகுலத்தின் தலையெழுத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எழுதிக் கொண்டிருக்கிறது. இதில் உள்ள அபாயங்களை களைந்து, இத்ெொழில்நுட்பத்தை அனைத்து நிலைகளிலும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த உலகளாவிய ஒத்துழைப்பு தேவை. குறிப்பாக ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கொண்டு பரப்பப்படும் தவறான மற்றும் பொய்யான தகவல்கல், சைபர் குற்றங்கள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உலக நாடுகள் தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வருங்காலத்தில் எல்லோருக்கும் நன்மை பயக்கும் என்பதை உறுதி செய்வதற்கான அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது. பொது நலனைக் கருத்தில் கொண்ட செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்றுகொள்வதிலும், தரவு பாதுகாப்பு குறித்த தொழில்நுட்ப சட்டத்தை வகுப்பதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்த உச்சி மாநாட்டுக்கு என்னை அழைத்ததுடன், மாநாட்டுக்கு தலைமை தாங்க செய்ததற்காக பிரான்ஸ் அதிபருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்."என்று பிரதமர் மோடி பேசினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.