தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

மூளையைத் தின்னும் அமீபா.. வழிகாட்டுதல்கள் வெளியிட்ட தமிழக சுகாதாரத்துறை! - AMOEBIC BRAIN FEVER Precautions

AMOEBIC MENINGOENC-EPHALITIS PRECAUTION: அமீபிக் மூளைக் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தான வழிகாட்டுதல்களை தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை வெளியிட்டுள்ளது.

மூளை (கோப்புப்படம்)
மூளை (கோப்புப்படம்) (CREDITS- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 10:33 PM IST

சென்னை: கரோனா நோய்த்தொற்று அலைகள் ஓய்ந்து அதன் தாக்கம் மெல்ல குறைந்து மீண்டு வந்திருக்கும் நிலையில். இது என்ன புதுசா அமீபிக் மூளை காய்ச்சல் என எண்ணலாம். சமீபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் அமீபிக் மூளைக் காய்ச்சல் எனப்படும் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் (Amoebic Meningo-Encephalitis PAM) பாதிப்பினால் உயிரிழந்தார். அதேபோல், மேலும் 2 சிறுவர்கள் கேரள மாநிலத்தில் இந்த நோய் பாதிப்பால் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நோய்த்தோற்று குழந்தைகள் மத்தியில் அதிகமாக பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்நோய்க்கான சிகிச்சை முறை இன்னும் தெளிவாக அறியப்படாத நிலையில், இந்நோயின் தீவிரம் குறித்தும், அதன் பாதிப்பில் இருந்து தப்பிக்கும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத் துறை சார்பில், மூளையைத் தின்னும் இந்த அமீபா நோயில் இருந்து முன்னெச்சரிக்கையாக எவ்வாறு இருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளனர். அதன்படி,

  1. பொதுமக்கள் யாரும் தேங்கிய நீர், மாசுபட்ட நீர், பல நாட்களுக்கு முன் சேகரித்த நீர் மற்றும் சுத்திகரிக்கப்படாத நீச்சல் குளங்கள் போன்ற நீரில் குளிக்க வேண்டாம். முக்கியமாக பெற்றோர், குழந்தைகளை இத்தகைய நீர்நிலைகளைல் எக்காரணத்தைக் கொண்டும் குளிக்க அனுமதிக்கக்கூடாது.
  2. குளங்கள், ஏரிகள் போன்ற நீர்த்தேக்கங்களின் சுற்றுப்புற சுகாதாரத்தை அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  3. தனியார் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான நீச்சல் குளங்களில் பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி அவ்வப்போது குளோரினேஷன் செய்து பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை இந்த நீச்சல் குளங்கள் உயிரிகள் பெருக்கெடுக்கும் சூழலில் அமைந்திருந்தால், 2 பிபிஎம் அளவிற்கு மேல் குளோரின் கொண்டு பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்டிப்பான முறையில் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
  4. உள்ளூர் நீர்நிலைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், எந்த நீர்த்தேக்க நிலையங்களில் இருந்தும் உள்ளூர் நீர் நிலையை அடைய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
  5. அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்களும், மருத்துவ பயிற்சியாளர்களும் இந்நோய் குறித்த வரலாறு மற்றும் அறிகுறிகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். எவரேனும் இந்நோயால் பாதிக்கப் பட்டது போல் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மூன்றாம் நிலை பராமரிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட வேண்டும்.

இதையும் படிங்க:மூளையைத் தின்னும் கொடிய நோய்.. மீண்டு வர வழியில்லையா?- மருத்துவர் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details