யாதாதிரி:தெலங்கானாவில் பெண்ணுக்கு அண்மையில் வாலுடன் ஆண் குழந்தை பிறந்து உள்ளது. வாலுடன் பிறந்த குழந்தையை முதலில் அதிசயமாக பார்த்த நிலையில் அதுவே பின்னாட்களில் குடும்பத்தினருக்கு தலைவலியாக மாறியது. மூன்று மாதத்தில் குழந்தையின் வால் 15 சென்டி மீட்டர் அளவுக்கு வளர்ந்துள்ளது.
இதனால் கலக்கம் அடைந்த பெற்றோர், யாதாதிரி புவனகிரி மாவட்டம் பிபிநகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் முதுகுத் தண்டில் உள்ள 5 முதுகெழும்புடன் இணைக்கப்பட்ட எலும்பு வால் போல் வெளியே வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நரம்பு மண்டலத்துடன் வால் இணைக்கப்பட்டு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்வதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வால் போன்ற எலும்பு மூளை மற்றும் நரம்பு மண்டலத்துடன் இணைந்து இருந்ததால், அறுவை சிகிச்சைக்கு பின்னரும் நரம்பியல் குறைபாடுகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் மூன்று மாத குழந்தைக்கு கடந்த ஜனவரி மாதம் ஐதராபாத் எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகள் அறுவை சிகிச்சை துறையின் தலைவர் மருத்துவர் ஷஷாங் பாண்டா தலைமையிலான மருத்துவர்கள் குழு குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டது.