ETV Bharat / entertainment

விரைவில் தொடங்கவிருக்கும் ‘மரகத நாணயம் 2’... மாஸ் அப்டேட் தந்த நடிகர் ஆதி - MARAGADHA NAANAYAM 2 MOVIE UPDATE

Maragadha Naanayam 2 Movie Update: 2017ஆம் ஆண்டு வெளியான ’மரகத நாணயம்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக நடிகர் ஆதி தெரிவித்துள்ளார்.

’மரகத நாணயம்’ பட போஸ்டர்
’மரகத நாணயம்’ பட போஸ்டர் (Credits: Film Posters)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 18, 2025, 4:38 PM IST

Updated : Feb 18, 2025, 5:04 PM IST

சென்னை: 2017ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் ’மரகத நாணயம்’. தமிழ் சினிமாவில் வெளிவந்த பேண்டஸி ஜானர் படங்களில் மிக முக்கியமான திரைப்படமாக மரகத நாணயம் பார்க்கப்படுகிறது. பேண்டஸி ஜானரில் நகைச்சுவையுடன் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. அப்போதிருந்து இப்போது வரை பலருக்கும் விருப்பமான திரைப்படமாக இது இருந்து வருகிறது.

நடிகர்கள் ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முனிஷ்காந்த் என பலரும் நடித்திருந்தனர். திபு நினன் தாமஸ் இசையமைத்த இப்படத்தின் ’நீ கவிதைகளா’ என்ற பாடல் இன்றளவும் பலரது ப்ளேலிஸ்டை ஆக்கிரமித்து வருகிறது. இப்படத்தை ஏ.ஆர்.கே சரவணன் இயக்கியிருந்தார். ஆக்சிஸ் பிலிம் பேக்ட்ரி நிறுவனம் இதனை தயாரித்திருந்தது.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக 2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்பின் எந்த அறிவிப்பும் இல்லை. தற்போது சமீபத்தில் நடந்த நேர்காணலில் மரகத நாணயம் இரண்டாம் பாகத்தைப் பற்றிய தகவலை சொல்லியுள்ளார் நடிகர் ஆதி.

ஆதி நடித்துள்ள ‘சப்தம்’ படம் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. ’ஈரம்’, ’வல்லினம்’ ஆகிய படங்களின் இயக்குநர் அறிவழகன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கான புரோமோஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக ஆதி அளித்த பேட்டியில் ‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதில் ”‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தை விரைவில் தொடங்கவுள்ளோம். அதற்கான பணிகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கின்றன. முதல் பாகத்த்ல் இருந்த அதே குழுவினர் தான் இந்த படத்திலும் பணி புரிகின்றனர். அவர்களுடன், இன்னும் பெரிய குழுவினரும் இணைந்திருக்கிறார்கள்.

முதல் கதை கேட்கும்போது ஒன்றாக இருந்தது. தற்போது 2ஆம் பாகத்தின் கதை பெரியதாக இருக்கிறது. அதற்கேற்ற வேலைகள் நடந்து வருகிறது. நானும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். முதல் பாகத்தில் எப்படி பொறுப்புடன் பணிபுரிந்தோமோ, அதேபோல், 2-ம் பாகத்திலும் பணிபுரியவுள்ளோம். கண்டிப்பாக நல்ல படமாக வரும் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ”விடுதலை போல இன்னொரு திரைப்படத்தை எடுக்க முடியுமா..?” விருது விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் பேச்சு!

மரகத நாணயம் படத்திற்கு பிறகு ’ஓ மை கடவுளே’, ’மாவீரன்’, ’வீரன்’ போன்ற படங்கள் பேண்டஸி ஜானரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் ’மரகத நாணயம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

Last Updated : Feb 18, 2025, 5:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.