ஹைதராபாத்:'சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது லே' என்பதற்கு ஏற்ப வீட்டில் ஒரு எலி இருந்தாலும் அது காட்டும் ஆட்டத்தை சொல்வதற்கு வார்த்தைகளே கிடையாது. அந்த ஒரு எலியை விரட்டுவதற்குள் நமது பாடு பெரும்பாடாய் போய்விடுகிறது. நாமும் என்னென்னவோ மருந்துகள், எலிப் பொறி என வாங்கி வைத்தாலும் சிம்பிளி வேஸ்ட் என நமது கண் முன்னாடியே அசால்டாக சுத்திக்கொண்டிருக்கும்.
அப்ப, இந்த எலியை விரட்ட என்ன தான் வழி? என்றால் சில இயற்கை பொருட்களை வைத்து கூட எலிகளை விரட்டலாம் என்கிறது ஓர் சர்வதேச ஆய்வு..அது என்ன வழி? தெரிந்து கொள்ளுங்கள் இந்த செய்தி தொகுப்பில்..
புதினா எண்ணெய் : புதினா எண்ணெயின் வாசனை மனிதர்களுக்கு புத்துணர்ச்சியை அளித்தாலும், அது எலிகளை எரிச்சலூட்டுகிறது. எனவே எலிகளை விரட்ட, ஒரு சிறிய துணியில் சிறிது பெப்பர்மின்ட் எண்ணெயை தடவி எலிகள் நடமாடும் இடங்களில் வைக்கவும். 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை இந்த துணியை மாற்றிவருவதால் எலிகள் வராமல் இருக்கும்.
இவற்றுடன், கிராம்பு மற்றும் மிளகு பொடியை எலிகள் நடமாடும் இடங்களில் தூவுவதால் வீட்டில் இருந்து எலிகள் ஓடி விடும் என்கின்றனர். 2012ல்,இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் பெஸ்ட் கன்ட்ரோல் அண்ட் மேனேஜ்மென்ட்டில் வெளியிடப்பட்ட ஆய்வில், வீடுகளில் இருந்து எலிகளை விரட்டுவதில் பெப்பர்மின்ட் (புதினா) எண்ணெய் பெரும் உதவியை செய்கிறது என தெரிவித்துள்ளது.
பேக்கிங் சோடா: சமையலில் பயன்படுத்தப்படும் பேக்கிங் சோடா எலிகளை விரட்டும் என்கின்றனர் நிபுணர்கள். இதற்கு முதலில் ஒரு கப் மைதாவை எடுத்து, அதில் பெப்பர்மின்ட் ஆயில் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும். இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து வீட்டில் எலிகள் வரும் இடங்களில் வைப்பதால் பலன் கிடைக்கின்றது.