தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? நீங்க செய்ய வேண்டிய 7 விஷயம் இதான்! - HABITS TO LOWER CHOLESTEROL

உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க தினமும் காலையில் கடைப்பிடிக்க வேண்டிய 7 விஷயங்கள் என்னென்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - getty images)

By ETV Bharat Health Team

Published : Jan 15, 2025, 1:43 PM IST

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழ சாறு: தினசரி காலை எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து குடிப்பது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களால் நிறைந்துள்ள எலுமிச்சை பழ சாறு கெட்ட கொழுப்புகளை குறைத்து, இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்: கரையக்கூடிய நார்ச்சத்து (Soluble Fiber) அதிகம் உள்ள உணவுகள், உதாரணத்திற்கு ஓட்ஸ், சியா விதைகள் மற்றும் ஆப்பிள் அல்லது வாழைப்பழம் போன்ற நார்ச்சத்து நிறைந்த பழங்களை காலை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கொலஸ்ட்ரால் இரத்தத்தில் உறிஞ்சப்படுவதை நார்ச்சத்து தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை (LDL) குறைக்கவும், நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்க உதவுகிறது.

கோப்புப்படம் (Credit - Pexels)

நட்ஸ்: காலை உணவுடன், பாதாம், வால்நட் மற்றும் ஆளிவிதைகளை சிறியளவில் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நல்ல கொழுப்பை மேம்படுத்தி, கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. தினசரி காலை, ஒரு கைப்பிடி நட்ஸ் வகைகளை சாப்பிடுங்கள்.

மார்னிங் வாக்: தினசரி காலை 20 முதல் 30 நிமிடங்களுக்கு விறுவிறுப்பாக நடைப்பயிற்சி செய்வது கொலஸ்ட்ரால் அளவை கணிசமாக குறைக்கும். தொடர் உடற்பயிற்சி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து ட்ரைகிளிசரைடுகளை குறைக்க உதவுகிறது. கூடுதலாக, காலையில் செய்யும் உடற்பயிற்சி நாள் முழுவதும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.

கோப்புப்படம் (Credit - Pexels)

யோகா அல்லது ஸ்ட்ரெச்சிங்: எளிமையான யோகா ஆசனங்கள் அல்லது ஸ்ட்ரெச்சிங் செய்வது மன அழுத்தம் மற்றும் கொழுப்பை குறைக்க உதவும். புஜங்காசனம், சேது பத்மாசனம் போன்ற ஆசனங்கள் இரத்த ஓட்டத்தை தூண்டி இருதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தினசரி காலை 10 முதல் 15 நிமிடங்களுக்கு யோகா அல்லது ஸ்ட்ரெச்சிங் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

கோப்புப்படம் (Credit - Pexels)

காபிக்கு பதிலாக கிரீன் டீ:காலை எழுந்ததும், டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால், க்ரீன் டீ குடிக்க முயற்சிக்கவும். க்ரீன் டீயில் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவும் கேடசின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. தினசரி காலை ஒரு கப் க்ரீன் குடிப்பது இதயத்தை பாதுகாக்கும், அதே வேளையில் நாள் முழுவதும் புத்துணர்ச்சி உணர்வை கொடுக்கும்.

கோப்புப்படம் (Credit - Pexels)

சர்க்கரையை தவிருங்கள்: காலை உணவில், பேஸ்ட்ரிகள், இனிப்பு பானங்களை முற்றிலுமாக தவிர்க்கவும். அதிகப்படியான சர்க்கரை ட்ரைகிளிசரைடுகளை உயர்த்தி நல்ல கொழுப்பின் அளவை குறைக்கும். இனிப்பு சாப்பிட வேண்டும் எனும் நினைப்பவர்கள் இயற்கை இனிப்புகளான தேன் அல்லது பழங்களை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

இதையும் படிங்க:

கெட்ட கொழுப்பை குறைக்கும் 5 சூப்பர் ஃபுட்ஸ்..தொப்பையும் கடகடவென குறையும்!

கெட்ட கொழுப்புகள் கரையனுமா? காலை எழுந்தவுடன் இந்த 6 உணவுகளை சாப்பிடுங்கள்!

பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ABOUT THE AUTHOR

...view details