ETV Bharat / state

அனல் பறந்த பாலமேடு ஜல்லிக்கட்டு; முதல் பரிசாக காரை தட்டி சென்ற பார்த்திபன்..! - PALAMEDU JALLIKATTU WINNERS

விறுவிறுப்பாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச் சுற்றில் 14 காளைகளை அடக்கிய நத்தத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் பார்த்திபன் முதல் பரிசாக நிஸான் காரை வென்றார்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றவர்கள்
பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றவர்கள் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2025, 8:36 PM IST

மதுரை: இன்று நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச் சுற்றில் 14 காளைகளை அடக்கிய நத்தத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் பார்த்திபன் முதல் பரிசாக நிஸான் காரை வென்றார்.

மதுரை பாலமேட்டில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 930 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. 400 மாடுப்பிடி வீரர்கள் கலந்து கொண்டு 8 சுற்றுகள் நடைபெற்றது. இந்த எட்டு சுற்றுகளில் ஒவ்வொரு சுற்றுக்களிலும் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட 32 பேர் போட்டியில் பங்கேற்றனர். இதில் காயம் காரணமாக ஒரு சிலர் பங்கேற்க முடியாத நிலையில் மற்ற வீரர்களுடன் இறுதி சுற்றாக ஒன்பதாவது சுற்று நடைபெற்றது.

ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக விளையாடிய இரண்டிலிருந்து ஐந்து வீரர்கள் வரை தேர்வு செய்யப்பட்டு அவர்கள் இறுதிச் சுற்றில் விளையாடினர். அவ்வாறு இறுதிச்சுற்றில் 32 வீரர்கள் விளையாடினர். அதில் வீரர்கள் ஒவ்வொருத்தருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

சிறந்த வீரர்கள்

இறுதி சுற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், சிறந்த மாடுப்பிடி வீரராக திண்டுக்கல் நத்தம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் 14 காளைகளை அடக்கி அசத்தியுள்ளார். அவருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: பனமடங்கி எருது விடும் விழா சீறிப்பாய்ந்த காளைகள்.. திடீரென கிணற்றில் விழுந்த காளை!

அதேபோல, மஞ்சம்பட்டி பகுதியை சேர்ந்த துளசிராம் 12 காளைகளை அடக்கி இரண்டாம் பரிசாக அவருக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. மூன்றாவதாக 11 காளைகளை அடக்கிய பொதும்பு பிரபாகரனுக்கு எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது.

சிறந்த காளை

அதேபோல் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையாக சத்திரப்பட்டியை சேர்ந்த விஜயாதங்கப்பாண்டி என்பவரது காளை முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது. அந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாவது காளையாக சின்னபட்டியைச் சேர்ந்த கார்த்திக் காளை தேர்வு செய்யப்பட்டு மாட்டின் உரிமையாளருக்கு கன்றுடன் கூடிய நாட்டின பசு வழங்கப்பட்டது. சிறந்த ஜல்லிக்கட்டு காளையாக மூன்றாவது பரிசு பெற்ற மாட்டின் உரிமையாளர் குருவித்துறை பகுதியை சேர்ந்த பவித்ரன் என்பவருக்கு விவசாய இயந்திரம் வழங்கப்பட்டது.

ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் வீதம் 10 சுற்றுகள் நடத்துவதற்கு வசதியாக 500 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், காலை 7.50 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதால், நேரமின்மை காரணத்தால் 9 சுற்றுக்களோடு போட்டி நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் 400 வீரர்கள் மட்டுமே பங்கேற்றனர். மீதமுள்ள 100 வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

51 பேர் காயம்

இந்த நிலையில் காலையிலிருந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் மாடுபிடி வீரர்கள் 24 பேர், மாட்டு உரிமையாளர்கள் 16 பேர், பார்வையாளர்கள் சிறுமி உட்பட 11 பேர் என மொத்தம் 51 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.