ETV Bharat / health

இருதய பிரச்சனைகளுக்கு தீர்வாகும் வால்நட்?..ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன? - WALNUT HEALTH BENEFITS

வால்நட்ஸ் சாப்பிடுவதால் இருதயம் தொடர்பான பிரச்சனைகள் குறையுமா? வால்நட் நுகர்வு குறித்து சர்வதேச ஆய்வு சொல்வது என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம் வாங்க..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Freepik)
author img

By ETV Bharat Health Team

Published : Jan 13, 2025, 7:33 PM IST

இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், இளம் வயதிலேயே பலர் பல கடுமையான உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக தற்போது, வயது வித்தியாசமின்றி மக்கள் இதயம் தொடர்பான நோய்களை எதிர்கொள்கின்றனர்.

திடீர் மாரடைப்பால் பலர் உயிரிழக்கும் செய்திகள் தொடர்ந்து வெளிவருகின்றன. பெரும்பாலான மக்கள் நல்ல ஆரோக்கியத்திற்காக தங்கள் அன்றாட உணவில் பலவிதமான பழங்கள் மற்றும் உலர் பழங்கள் மற்றும் விதை வகைகளை சேர்த்துக் கொள்கிறார்கள். அந்த வகையில், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினசரி வால்நட்ஸை உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

தினசரி வால்நட்ஸ் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. மிக முக்கியமாக, வால்நட் சாப்பிடுவதன் மூலம் இதய ஆரோக்கியம் பாதுகாப்பதோடு, பெரியவர்களுக்கு இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், வால்நட்ஸில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? இவற்றை சாப்பிடுவதால் இதயத்திற்கு என்ன பலன்கள்? என்பதை ஆய்வின் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம்.

பல ஆண்டுகளாக, வால்நட் நுகர்வு இதய நோய்க்கான ஆபத்து காரணிகளைக் குறைக்குமா என்பது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், வால்நட்ஸ் இதய நோய் மற்றும் இறப்பைக் குறைப்பதில் உதவியாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வு சொல்வது என்ன?: இதே போல, 2 வருடங்களாக தினசரி உணவில் வால்நட்ஸைச் சேர்ப்பது, கொலஸ்ட்ரால் அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஆய்வு நடத்தியது. அதில், வால்நட்ஸை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் உள்ள மொத்த கொலஸ்ட்ராலை குறைத்து எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் 63 முதல் 79 வயதுடைய 636 பேர் உட்படுத்தப்பட்டனர். 636 நபர்களில், 67 சதவீதம் பேர் உயர் இரத்த அழுத்தம் அல்லது ஹைபர்கொலெஸ்டிரோலீமியாவுக்கு மருந்துகளை உட்கொள்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, ஒரு குழுவினர்களை வால்நட் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், மற்றொரு குழுவினரை தினசரி உணவில் அரை அப் வால்நட் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் பங்கேற்பாளர்கள் தங்கள் உணவை எவ்வளவு நன்றாகப் பின்பற்றுகிறார்கள் மற்றும் அவர்களின் உடல் எடையில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்பதைப் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்து கண்காணித்தனர். கூடுதலாக, பங்கேற்பாளர்களின் கொலஸ்ட்ரால் அளவுகள் பரிசோதிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன.

பல்வேறு பிரச்சனைகளுக்கு சிகிச்சை : வால்நட்ஸில் பாலிபினால்கள் உட்பட பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளது. எனவே இதனை தினமும் உட்கொள்வதன் மூலம் இளமைப் பருவ பிரச்சனை மற்றும் இளமைப் பருவத்தில் ஏற்படும் இதய நோய்கள் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். வால்நட் உட்கொள்வது புற்றுநோய், உடல் பருமன், நீரிழிவு மற்றும் மூளை தொடர்பான பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் அளிப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆரோக்கியமான ஊட்டச்சத்து மற்றும் நல்ல வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை வளர்ப்பதற்கு வால்நட்ஸ் ஒரு நல்ல உணவாகவும் செயல்படுகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் (NCBI) ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில், அக்ரூட் பருப்புகள் சாப்பிடுவது பெரியவர்களுக்கு இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கர்ப்பப்பை வாய் புற்றுநோய்: பெண்களை அச்சுறுத்தும் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.