ETV Bharat / health

யூரிக் அமிலம் அதிகமாக இருக்கா? அப்போ இந்த காய்கறியை உணவில் சேர்த்து பாருங்கள்! - RADDISH TO CONTROL URIC LEVEL

உடலில் யூரிக் அமிலத்தின் அளவை கட்டுக்குள் வைக்க முள்ளங்கி எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காண்போம்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : Jan 14, 2025, 1:53 PM IST

யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் உள்ள பியூரின்களின் சிதைவால் உற்பத்தி செய்யப்படும் ஒரு இரசாயனமாகும். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு கழிவுப் பொருள். இது பொதுவாக சிறுநீர் வழியாக வெளியேறும். ஆனால், சிறுநீரின் வழியாக யூரிக் அமிலம் வெளியேறாத போது உடலில் பிரச்சனைகள் ஏற்படத் தொடங்குகிறது. இந்த நிலை 'ஹைப்பர்யூரிசிமியா' (Hyperuricemia) என்று அழைக்கப்படுகிறது.

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் வீக்கம், வலி, மூட்டுப் பிரச்சனைகள் மற்றும் சிறுநீரகக் கற்கள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனைக் குறைக்க பல வகையான மருந்துகள் கிடைத்தாலும், சில உணவுகள் மூலம் இயற்கையாகவே யூரிக் அமிலத்தின் அளவை குறைக்கலாம். அந்த வகையில், குளிர்காலத்தில் அதிக விளைச்சல் செய்யப்படும் முள்ளங்கி, அதிகரித்த யூரிக் அமிலத்தை குறைக்க எவ்வாறு உதவுகிறது என்பதை பார்க்கலாம்..

யூரிக் அமிலம் அதிகரித்தால், உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தற்போது இருக்கும் ஆரோக்கியமற்ற உணவு முறை யூரிக் அமிலத்தின் அளவை அதிகரித்து பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், குளிர்காலத்தில் விளையக்கூடிய காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் யூரிக் அமிலத்தின் அளவு கட்டுக்குள் வைக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிலும், குறிப்பாக குளிர்காலங்களில் விளையக்கூடிய முள்ளங்கி யூரிக் அமிலத்தின் அளவை குறைப்பதாக அய்வு தெரிவித்துள்ளது.

உடலில், யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது எலும்புகளில் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவை, கடுமையான மூட்டுவலிக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக குளிர்காலங்களில் இந்த வலி அதிகமாகும். இந்நிலையில், முள்ளங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள் யூரிக் அமிலத்தின் அளவை குறைத்து நிவாரணம் அளிப்பதாக சயின்ஸ் டைரக்ட் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

முள்ளங்கியில் உள்ள உயிர்வேதியியல் கலவைகள் பியூரின்கைன் உற்பத்தியை தடுக்கிறது. இதனால், யூரிக் அமில கட்டிகளை அகற்ற உதவியாக இருக்கிறது. இது தவிர, முள்ளங்கியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் நன்மை பயக்குகிறது.

அதே நேரத்தில், முள்ளங்கி கீரை உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த கீரை உட்கொள்வதால், குடலில் இருக்கும் நச்சுக் கழுவுகள் மலம் மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறுகின்றன. வாரத்திற்கு ஒன்று முதல் இரண்டு முறை முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்வதால், யூரிக் அமிலத்தின் அளவு கட்டுக்குள் இருப்பதோடு, இரத்த சர்க்கரையின் அளவும் குறையும் என்கிறது ஆய்வு.

இதையும் படிங்க:

யூரிக் ஆசிட் அளவை குறைக்கும் 6 இலைகள்..இப்போதே தெரிஞ்சுக்கோங்க!

உடலில் யூரிக் அமிலம் உற்பத்தியை குறைக்கணுமா? இந்த 5 சூப்பர் ஃபுட்ஸ் கட்டாயம் உதவும்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.