ETV Bharat / health

பொங்கலுக்கு சுவையூட்டும் 'முந்திரி'...அதன் நன்மைகள் தெரியுமா? - CASHEW NUT BENEFITS

சருமம் முதல் இதய ஆரோக்கியத்தை பராமரிப்பது வரை முந்திரி உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Freepik)
author img

By ETV Bharat Health Team

Published : Jan 14, 2025, 11:22 AM IST

முந்திரி என்றால் யாருக்கு தான் பிடிக்காது? வீட்டில் பொங்கல், பாயாசம் என விஷேசமாக செய்யும் பொழுது, சமையலறைக்கு சென்று பேப்பர் பொட்டலத்தில் இருக்கும் முந்திரியை சாப்பிட்ட ஞாபகம் நினைவிருக்கா? உணவில் முந்திரி சேர்த்தால் தனி சுவை தான். அதுவும் நெய்யில் வறுத்தது என்றால்? பக்கதில் உள்ளவர்களிடம் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவோம். முந்திரியின் சுவை பற்றி உங்களுக்கு தெரிந்திருந்தாலும் அதன் நன்மைகளை பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

இதய நோய்யை தடுக்கிறது: முந்திரியில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், இதய செயல்பாட்டை மேம்படுத்த தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முந்திரி பருப்பில் நிறைந்துள்ளது. அமெரிக்க மக்கள், தங்களது உணவில் முந்திரியை சேர்த்துக்கொள்வதால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைவதாக NCBI நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

புற்றுநோயை தடுக்கிறது: முந்திரி பருப்பு உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகுக்கிறது. முந்திரியில் உள்ள புரோந்தோசயனிடின்கள் (Proanthocyanidins) எனும் ஒரு வகையான ஃபிளாவனால் (flavonol) உடலில், புற்றநோய் கட்டியை வளர விடாமல் தடுக்கிறது.

வெயிட் லாஸ்: உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை முந்திரி பருப்பு குறைக்கிறது. முந்திரி பருப்பு உட்கொள்வதால், அதிக ஆற்றல் கிடைத்து பசியை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். எடையை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் தினமும் 3 முதல் 4 முந்திரி பருப்புகளை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)

சருமம் பராமரிப்பு: முந்திரியில் நிறைந்திருக்கும் தாமிரம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் சருமத்தை பொலிவாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் வயதான தோற்றத்தை தடுக்கிறது மற்றும் தாமிரம் மற்ற நொதிகளுடன் சேர்ந்து கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.

குடல் ஆரோக்கியம்: தினசரி முந்திரி உட்கொள்வது செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை நீக்கி குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. வயிற்று தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட தினசாரி இரண்டு முதல் மூன்று முந்திரி எடுத்துக்கொள்ளலாம்.

கண் பார்வை: முந்திரியில் அதிகளவும் லுடீன் மற்றும் பிற முக்கிய ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை கண் பார்வையை மேம்படுத்துவதோடு கண்களை சேதமடையாமல் பாதுகாக்கின்றன. தினசரி முந்திரி சாப்பிடுவது ஆரோக்கியமான கண்பார்வையை உறுதி செய்கிறது.

நரம்பு மண்டலம் பராமரிப்பு: உடலில் மெக்னீசியம் குறைபாடு பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இது நரம்புகள் மற்றும் எலும்பின் செய்ல்பாடுகளை பாதிப்பது மட்டுமின்றி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. தவறாமல், முந்திரி உட்கொள்வது, உடலில் மெக்னீசியத்தின் தேவையை பூர்த்தி செய்கிறது. இதனால், ஒற்றை தலைவலி மற்றும் உடல் வலிகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இதையும் படிங்க: இருதய பிரச்சனைகளுக்கு தீர்வாகும் வால்நட்?..ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.