தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

கோதுமை மாவுடன் 'இந்த' மாவை சேர்த்து சப்பாத்தி செய்யுங்கள்.. கொழுப்பு தானாக கரையும்! - OATS WITH WHEAT FLOUR CHAPATI

கோதுமை மாவுடன் ஓட்ஸ் மாவை கலந்து சப்பாத்தி செய்து சாப்பிட்டால் கொழுப்பு வேகமாக குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதை எப்படி செய்வது? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதை பார்க்கலாம்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat TamilNadu)

By ETV Bharat Health Team

Published : Nov 1, 2024, 12:18 PM IST

உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் இரவு உணவாக சப்பாத்தியை தேர்ந்தெடுப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும், சப்பாத்தி மாவுடன் மற்றொரு மாவை சேர்ப்பதால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் விரைவாகக் குறைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். அது என்ன மாவு? அது எப்படி கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது? என்பதை இப்போது பார்க்கலாம்..

கோதுமையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் சப்பாத்தி சாப்பிடுவது உடல் எடை குறைக்க உதவுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் தான் பலரும் குறைந்தது ஒரு வேளை உணவாக சப்பாத்தியை எடுத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். இருப்பினும், கோதுமை மாவுடன் ஓட்ஸ் மாவு சேர்த்து சப்பாத்தி செய்து சாப்பிட்டு வருவதால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு விரைவில் குறைவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இது பல ஆரோக்கிய நனமைகளையும் கொண்டுள்ளது.

ஓட்ஸில் இருக்கும் சத்துக்கள்: ஓட்ஸில் பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஓட்ஸ் சாப்பிடுபவர்களுக்கு எல்டிஎல் கொழுப்பு அளவு குறைவதாக 2004ல் 'அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில்' வெளியிட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்ஸ் சப்பாத்தி நன்மைகள்:

  • மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், ஓட்ஸ் மாவில் செய்யப்படும் சப்பாத்திகளை எடுத்துக்கொள்ளலாம்
  • ஓட்ஸில் உள்ள பீட்டா குளுக்கன் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. இது செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.
  • இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபீனால்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்
  • ஓட்ஸில் எலும்புகளை வலுவாக வைத்திருக்கும் சில தாதுக்கள் உள்ளன.
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஓட்ஸ் மாவில் செய்யப்பட்ட சப்பாத்தியை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
  • ஓட்ஸில் பல நன்மைகள் உள்ளதால், சப்பாத்தி மாவுடன் ஓட்ஸ் மாவை சேர்த்து சாப்பிடலாம்

ஓட்ஸ் சப்பாத்தி செய்வது எப்படி?:

செய்முறை 1:அரை கப் கோதுமை மாவுடன், அரை கப் அளவிற்கு அரைத்து பொடியாக்கி வைத்துள்ள ஓட்ஸ் மாவை சேர்த்து, தண்ணீர் மற்றும் உப்பு கலந்து பிசைந்து சப்பாத்தி செய்து சாப்பிடலாம்.

செய்முறை 2:அரை கப் ஒட்ஸ் மாவுடன், 1 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சாப்பிடலாம்.

இதையும் படிங்க:

தொங்கும் தொப்பை-ஐ குறைக்க வெள்ளை பூசணி ஜூஸ்..எப்படி குடிக்கணும் தெரியுமா?

சப்பாத்தி சூப்பர் சாப்டாக வர மாவை இப்படி பிசைந்து பாருங்க..அசந்து போய்ருவீங்க!

பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details