ஹைதராபாத்:கோடை காலத்தில் கூவி கூவி விற்கப்படும் நுங்கு மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, நீர்ச்சத்தை அதிகரிப்பது என மனிதனுக்கு கிடைத்த அருமருந்தாக இருக்கிறது. இது, ஐஸ் ஆப்பிள் (Ice Apple) என்றும் அழைக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய நுங்கில் இருக்கும் பயன்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..
நுங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
- கால்சியம்
- புரதம்
- நார்ச்சத்து
- வைட்டமின்கள் சி,ஏ,ஈ,கே
- இரும்புச்சத்து
- பொட்டாசியம்
- துத்தநாதம் (Zinc)
- பாஸ்பரஸ்
ஹைதராபாத்தை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். நஹுஷ் குண்டேவின் கூற்றுப்படி, தேங்காய் சுவையில் உள்ள நுங்கை உட்கொள்வதன் மூலம் நமது உடலுக்கு மிகவும் முக்கியமான வைட்டமின் பி, இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் கிடைப்பதாக கூறுகிறார்.
நுங்கு சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது:
- நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது: நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு காரணமாக, மக்கள் எளிதில் தொற்று நோய்களுக்கு ஆளாகிறார்கள். இதில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
- நுங்கு உங்கள் உடலை குளிர்ச்சியாகவும்,நீர்ச்சத்தை அதிகரிக்கவும் உதவியாக இருக்கிறது
- எடை மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது
- செரிமான பிரச்சனைகளை குணமாகும்
- கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க முக்கிய பங்களிக்கிறது
- இந்த பழத்தை உட்கொள்வதன் மூலம் அரிப்பு மற்றும் சொறி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகிறது
- கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கிறது
- இரத்த சோகை உள்ளபவர்களுக்கு நல்ல மருந்தாக இருக்கிறது
- சருமம் மற்றும் முடி பிரச்சனைகளை சரி செய்கிறது
- இரத்த சக்கரையின் அளவை குறைப்பதால், சக்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு முதல் 3 நுங்குகள் வரை எடுத்துக்கொள்ளலாம்.