தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

சானிட்டரி பேட், மென்சுரல் கப் வாங்க போறீங்களா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க! - EXPIRED MESTRUATION PRODUCTS

மாதவிடாய் காலங்களில் கவனக்குறைவால் பெண்கள் செய்யும் செயல்கள் பெரும் சிக்கலுக்கு வழிவகுக்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels, Getty Images)

By ETV Bharat Health Team

Published : Jan 31, 2025, 12:03 PM IST

நாம் கடையில் வாங்கும் உணவு சார்ந்த பொருட்களில், உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகளை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்கிறோம். இது சரியான முறை தான். ஆனால், அவ்வப்போது நாம் பயன்படுத்தும் பொருட்களுக்குக் கூட காலாவதி தேதி இருப்பதை மறந்து விடுகிறோம்.

குறிப்பாக, மாதவிடாய் காலத்தில் நாம் பயன்படுத்தும் சுகாதாரப் பொருட்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இருப்பினும், இந்த அலட்சியம் பிறப்புறுப்பு தொற்றுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது படிப்படியாக பல்வேறு வகையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்றும், உடலுறவின் போது துணைவருக்கு பரவும் அபாயம் உள்ளது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். இந்தச் சூழலில், மாதவிடாய் பொருட்களின் காலாவதி தேதி பற்றிய சில உண்மைகளைத் தெரிந்துகொள்வோம்..!

எதை எத்தனை நாட்களுக்குப் பயன்படுத்த வேண்டும்?

மாதவிடாய் காலத்தில் சுகாதாரத்தைப் பராமரிக்க தற்போது பல்வேறு வகையான சுகாதாரப் பொருட்கள் கிடைக்கின்றன. நாப்கின்கள் (Pads), மாதவிடாய் கோப்பை (Menstrual Cup), டம்பான்கள் (Tampons) போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்துகிறோம்.

கோப்புப்படம் (Credit - Pexels)

இருப்பினும், பலர் இவற்றை வாங்கும் போது பாக்கெட்டுகளில் உள்ள உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகளைப் கண்டுகொள்வதில்லை. ஏனென்றால், இவை உடலுக்கு வெளியே பயன்படுத்தப்படும் பொருட்கள் என்றும் அதனால் எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்றும் பலர் நினைக்கிறார்கள். ஆனால் எல்லாப் பொருட்களையும் போலவே, இவற்றுக்கும் காலாவதி தேதி உண்டு, அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்வது நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதன்படி,..

கோப்புப்படம் (Credit - Pexels)
  1. சானிட்டரி நாப்கின்களின் பாக்கெட்டுகளில் உற்பத்தி தேதி எழுதப்பட்டிருக்கும்.அதற்குக் கீழே, அவை எந்த தேதிக்குள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தேதியும் எழுதப்பட்டிருக்கும். எனவே, இதை மனதில் கொண்டு, புதிதாக தயாராகி வந்துள்ள நாப்கின்களை வாங்கி பயன்படுத்துவது நல்லது.
  2. இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் டம்பான்களை நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், பல வருடங்களாகக் கிடைக்கும் டம்பான்களை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது எனவும் எச்சரிக்கின்றனர். ஏனென்றால் அவை புதியதாகத் தோன்றினாலும், தீங்கு விளைவிக்கக்கூடிய நுண்ணிய பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களைக் கொண்டிருக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
  3. பெரும்பாலான மென்சுரல் கப் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை. இருப்பினும், அவற்றின் தரம் மற்றும் நாம் கடைப்பிடிக்கும் சுகாதாரத்தையும் பொறுத்தது. மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்துவதற்கு முன் லேபிள்களை நன்கு படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதுதான் தொற்றுகளுக்குக் காரணமா?

கோப்புப்படம் (Credit - Pexels)

சுகாதாரப் பொருட்களை வாங்கும்போது, ​​பாக்கெட் புதியதா இல்லையா என்பதை சரிபார்க்கிறோம், ஆனால் அதன் காலாவதி தேதியை பலரும் கவனிப்பதில்லை. இருப்பினும், சில நேரங்களில், பாக்கெட் புதியதாக இருந்தாலும், கடைகளில் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள ஈரப்பதம் காரணமாக கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் அதன் மீது வளரும் அபாயம் உள்ளது.

இத்தகைய பொருட்களைப் பயன்படுத்துவது பிறப்புறுப்புகளில் பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இதன் விளைவாக, அந்தப் பகுதியில் அரிப்பு, சிவப்பு நிற தடிப்புகள் மற்றும் எரிதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். அதனால், ஒவ்வொரு முறையும் மாதவிடாய் தொடர்பான பொருட்களை வாங்கும் போது உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகளைச் சரிபார்த்து, சரியாக பேக் செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்.

இதையும் படிங்க:எத்தனை மணி நேரத்திற்கு ஒரு முறை Pad-ஐ மாற்ற வேண்டும்? மருத்துவர் விளக்கம்! - how often we should change pad

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்

ABOUT THE AUTHOR

...view details