ETV Bharat / health

முதுகு வலி அதிகமா இருக்கா? உடனே கைவிட வேண்டிய 6 பழக்கங்கள் இவை தான்! - REASONS FOR BACK PAIN

ஆண்கள் பின்பாக்கெட்டில் பர்ஸ் வைப்பதால், சியாடிக் நரம்பில் அழுத்தம் ஏற்பட்டு முதுகுவலிக்கு வழிவகுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : Jan 29, 2025, 2:29 PM IST

வாகனம் ஓட்டுதல்: பல மணி நேரம் தொடர்ந்து இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதால், முதுகுத் தண்டுவட டிஸ்க்குகளின் நெகிழ்வுத்தன்மை குறைந்து இறுக்கமாகிறது. இதனால், முதுகுவலி ஏற்படும் அபாயம் அதிகமாகிறது. எனவே, வாகன ஓட்டுநர்கள் மற்றும் தினசரி பல மணி நேரம் வாகனம் ஓட்டுபவர்கள், இருசக்கர வாகனத்தின் பின்சக்கர ஷாக் அப்ஸர்பர்கள் நன்கு செயல்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், வாகன ஓட்டிகள் மேடு மற்றும் பள்ளங்களில் பயணிக்கும் போது கவனம் செலுத்தும் போது தண்டுவடம் ஓரளவு பாதுகாக்கப்படும்.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்: எந்தவித சத்துக்களும் இல்லாத தீன்பண்டங்கள், உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உடலில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் விளைவாக அடிமுதுகு உட்பட பல பாகங்களில் வீக்கம், வலி ஏற்பட்டு காலப்போக்கில் கடுமையான முதுகு வலிக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக, வெள்ளை சர்க்கரை பயன்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்பதன் மூலம் முதுகுவலி ஏற்படுவதை தடுக்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)

ஹை ஹீல்ஸ் காலணி அணிவது: ஹை ஹீல்ஸ் அணிவதால் இடுப்புத் தசை அழுத்தப்பட்டு முதுகின் அடிப்பகுதியில் வலியை ஏற்படுத்துகிறது. இந்த பழக்கம் அடிக்கடி தொடரும் போது வலியும் கடுமையாகும். எனவே, பெண்கள் தொடர்ந்து ஹை ஹீல்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும்.

பின்பாக்கெட்டில் வைக்கும் பர்ஸ்: International journal of medical research and health stories நடத்திய ஆய்வில், பேண்ட்டின் பின் பாக்கெட்டில் பர்ஸ் வைத்துக்கொண்டு அமரும் போது, சியாட்டிக் நரம்பு அல்லது அதனுடன் தொடர்புடைய தசைகள் மீது அழுத்தம் கொடுக்கிறோம். இந்த அழுத்தம் நரம்பு மீது பாதிப்பை ஏற்படுத்தி முதுகு வலிக்கு வழிவகுக்கும் என்கிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat)

இறுக்கமான ஜீன்ஸ் அணிவது: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அன்றாடம் பயன்படுத்தும் உடையில் ஜீன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், சில நேரங்களில் நாம் இறுக்கமாக அணியும் ஜீன்ஸ் அடிமுதுகு மற்றும் புட்டத் தசைகளுக்கு இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. இதன் விளைவாக, முதுகுவலி மற்றும் மரத்துப்போகும் உணர்வு ஏற்படும் அபாயம் உள்ளது.

கெட்ட பழக்கம்: புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற தீய பழக்கங்கள் முதுகு வலியை ஏற்படுத்தும் ஒரு காரணியாக இருக்கிறது. முதுகுத்தசை உறுதிக்கு உதவும் ஊட்டச்சத்துகள் அங்கு சென்று சேராமல் வலுவிழக்கச் செய்யும் தன்மை புகைப்பிடிப்பதற்கு இருக்கிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)

இதையும் படிங்க: சிகரெட் பிடிப்பதை விட அதிக நேரம் உட்கார்ந்திருப்பது ஆபத்து..முதுகு வலிக்கு மருத்துவர் சொல்லும் டிப்ஸ்! - Remedy for Back and Neck Pain

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.