ETV Bharat / lifestyle

சிலிண்டர் உபயோகிக்கும் போதும் இதையும் தெரிஞ்சுக்கோங்க..உஷார் மக்களே! - LPG SAFETY TIPS

பாதுகாப்பான முறையில் கேஸ் சிலிண்டரை எப்படி பயன்படுத்துவது என்பதை அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Jan 30, 2025, 2:56 PM IST

உலகம் முழுவதும் உள்ள வீடுகளில் பயன்படுத்தப்படும் LPG பாதுகாப்பான முறையில் பயன்படுத்தப்பட்டாலும் பாதுகாப்பு முறை குறித்து எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். சில சமயங்களில் அலட்சியமாக இருப்பது பெரும் விபத்துகள் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. அந்த வகையில், சிலிண்டரைப் பயன்படுத்தும் போது எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

  • நைலான் கயிற்றுடன் இருக்கும் பாதுகாப்பு மூடி எப்போதும் சிலிண்டரிலேயே பிணைக்கப்பட்டு இருக்க வேண்டும்
  • எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களில் இருந்து சிலிண்டரை சில அடிகள் தள்ளி வைத்திருக்க வேண்டும்
  • LPG வாங்கும் போது அங்கீகரிக்கப்பட்ட உரிமையாளர்களிடம் பெறுவதை உறுதி செய்யுங்கள்.
  • சமைக்கும் போது, அடுப்பில் பாத்திரங்களை வைத்து நீண்ட நேரம் கவனிக்காமல் விட்டால், சமையல் பொருட்கள் கொதித்து வெளியேறி தீயை அணைத்து விடும். இதனால், வாயு கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
  • சமைக்கும் போது சமையலறையின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறந்திருப்பதை உறுதி செய்யவும்.
  • எரிவாயுக்காக பயன்படுத்தபடும் குழாய்கள் மற்றும் இணைப்புகளை மட்டுமே பயன்படுத்தவும்.
  • சிலிண்டரை நிமிர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒரு போது படுத்த நிலையில் வைக்க கூடாது.
  • 2 முதல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரப்பர் டியூப்பை மாற்ற வேண்டும்.
  • ஆண்டுக்கு ஒரு முறை அடுப்பு மற்றும் சிலிண்டரில் உள்ள ரெகுலேட்டரை மாற்றுங்கள்.
  • வெளியில் செல்லும் போது, ​​இரவில் படுக்கும் முன், கேஸ் அணைக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்யுங்கள்.
  • சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் போது கேஸ் சிலிண்டரில் சீல் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
  • சிலிண்டரை காற்று மற்றும் ஒளி வெளிப்படும் இடத்தில் வைக்க வேண்டும். சமையலறை அலமாரியில் வைத்தால், கதவின் கீழ் மற்றும் மேல் பகுதிகளில் காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • வாயு கசிவு ஏற்பட்டால், ஜன்னல்களைத் திறந்து அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும். LPG சப்ளையர் அல்லது அவசரகால சேவைகளை உடனடியாக தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
  • சிலிண்டரில் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஐஎஸ்ஐ அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்
  • அடுப்பு அல்லது இணைப்பில் சிக்கல் இருந்தால் நீங்களே சரிசெய்ய வேண்டாம். பழுதுபார்ப்பு தகுதி வாய்ந்த நிபுணர்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதையும் படிங்க: கேஸ் சிலிண்டர் விரைவில் காலியாகி விடுகிறதா? இப்படி சமைத்தால் நிச்சயம் மிச்சப்படுத்தலாம்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.