தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோியிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்களும் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (ஜன.29) நடிகை தீபா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தந்தார். நடிகை தீபா 2000ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான 'மாயி' திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து 'வாம்மா மின்னல்' என்ற காமெடி காட்சியில் நடித்து பிரபலமானவர். இவர் தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: "விஜய் கட்சியில் சேர எப்போது அழைப்பு வந்தாலும் நான் ரெடி" - 'பிக்பாஸ்' தர்ஷா குப்தா பேட்டி! - BIGG BOSS DARSHA GUPTA
கோயிலுக்கு வருகை தந்த நடிகை தீபா, மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினார். கோயிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த நடிகை தீபாவுடன் அங்கு நின்ற பக்தர்கள் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும், கைகொடுத்தும் மகிழ்ந்தனர்.