ETV Bharat / technology

மாப்ள இவரு; ஆனா சட்ட என்னது! DeepSeek-ஐ சந்தேகிக்கும் ChatGPT தலைமை? - DEEPSEEK AI CHATBOT

DeepSeek (டீப்-சீக்) ஏஐ மாடல் ஓபன்-ஏஐ (Open AI) தரவுகளை டெவலப்பர் கணக்குகளில் இருந்து எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டீப்-சீக் செயற்கை நுண்ணறிவு சாட்-பாட்
டீப்-சீக் செயற்கை நுண்ணறிவு சாட்-பாட் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tech Team

Published : Jan 30, 2025, 3:31 PM IST

Updated : Jan 30, 2025, 4:29 PM IST

கதைப்போமா என்ற காலங்களுக்கு அப்பாற்பட்டு நிற்கிறோம் நாம்! அளப்பரிய தொழில்நுட்ப வளர்ச்சியின் கட்டத்தில் இருக்கும் நாம், பேச ஆள் இல்லை என்றால் கூட, அதற்கென வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மாடல்கள் நமக்காக தயார் நிலையில் உள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், ஓபன்-ஏஐ சாட்-ஜிபிடி (OpenAI's ChatGPT), மெட்டா லாமா (Meta Llama), கூகுள் ஜெமினை (Google Gemini), மைக்ரோசாப்ட் கோ-பைலட் (Microsoft CoPilot) என பட்டியல் பெரிது. நமக்கு தேவைப்படும் தகவல்களை வேகமாகவும், விவேகமாகவும் இந்த செயற்கை நுண்ணறிவு மாதிரிகளால் தர முடியும்.

இந்த நேரத்தில் சிலிக்கான் வேலி ஏஐ தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு பேரதிற்ச்சியாக சந்தைக்குள் நுழைந்தது சீனாவின் டீப்-சீக் ஆர்1 (DeepSeek R1) எனும் ஏஐ மாடல். மேற்கூறப்பட்ட முந்தைய நிறுவனங்கள் தராத அம்சங்களையும், துல்லியத்தையும் தங்களின் ஏஐ சாட்பாட் (AI Chatbot) பயனர்களுக்கு வழங்கும் எனவும் நிறுவனம் மார்தட்டியது.

தகவல் திருட்டு?

ஆனால், அதற்குள் புயல் அடித்தது போல ஒரு பிரச்னை கிளம்பியுள்ளது. ப்ளூம்பெர்க் செய்தியின் அடிப்படையில், மைக்ரோசாப்ட் மற்றும் ஓபன்-ஏஐ இணைந்து மலிவு விலையில் பல அம்சங்களுடன் கொண்டுவரப்பட்ட DeepSeek மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளன. ஓபன்-ஏஐ கூற்றுபடி, தங்கள் தரவுகளை வைத்து தான் சீன நிறுவனம் புதிய ஏஐ மாடலை தயாரித்திருக்கலாம் என்று சந்தேகக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

“பொதுவாக டெவலப்பர்கள் பிற தரவுகளைப் பயன்படுத்தி தங்களின் ஏஐ மாடல்களை உருவாக்குவது இயல்பான ஒன்று. இதற்காக பெருமளவு தகவல்கள் அவர்களுக்குத் தேவைப்படும். பொது டெவலப்பர் தளங்களில் இருக்கும் சாட்-ஜிபிடி தரவுகளும் அவ்வாறு அணுகப்படும். தங்களின் மென்பொருள்களில் சாட்-ஜிபிடி சேவையை இணைப்பதும் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.

இதையும் படிங்க: இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பிய என்.வி.எஸ்-02; இதன் முக்கியத்துவம் தெரியுமா?

டெவலப்பர்கள் தங்கள் சொந்த பயன்பாடுகளுடன் அதன் AI ஐ ஒருங்கிணைக்க OpenAI-இன் மென்பொருளை கட்டமைக்கும் தகவல்களை (API) பயன்படுத்தலாம் என்றாலும், போட்டி மாதிரிகளை உருவாக்கி உள்ளடக்கிய சேவைகளை முடக்குவது விதிமீறலாகும்,” என்று ஃபினான்சியல் டைமஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளது. எனினும், தாங்கள் கண்டறிந்த ஆதாரங்களை இதுவரை ஓபன்-ஏஐ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு தானே தணிக்கை

இந்த சூழலில், டீப்-சீக் சாட்பாட் சீனாவை குறித்த சிலத் தகவல்களை தணிக்கை செய்து வழங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது, சீனா தொடர்பான சிலத் தகவல்களை இந்த ஏஐ மாதிரி வழங்குவதும், பின்னர் அதனை உடனடியாக அழிப்பதும், சிலவற்றை குறித்து தகவல் அளிக்க மறுப்பதும் என களோபரம் செய்வதாக பயனர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

கார்டியன் பத்திரிகை வெளியிட்ட தகவலின் அடிப்படையில், சீனாவில் பேச்சு சுதந்திரம் குறித்து டீப்-சீக்கிடம் ஒரு பயனர் கேட்டதாக தெரியவந்துள்ளது. சாட்பாட் ஆரம்பத்தில் விரிவான தகவல்கள் மற்றும் எடுத்துக்காட்டுகளை வழங்கியிருந்தாலும், அது திடீரென்று தன்னைத்தானே துண்டித்துக் கொண்டு "வெளிப்படையான" பதிலை மன்னிப்புடன் மாற்றியது. அந்த வகையான கேள்வியை எவ்வாறு அணுகுவது என்று பயனரிடம் தெரியவில்லை என்று டீப்-சீக் சாட்பாட் கூறியதாக கார்டியன் தெரிவித்துள்ளது.

டீப்-சீக் சாட்பாட் உடன் மேற்கொண்ட உரையாடல்
டீப்-சீக் சாட்பாட் உடன் மேற்கொண்ட உரையாடல் (ETV Bharat Tamil Nadu)

இந்த தகவல்களின் அடிப்படையில் நாம் சில கேள்விகளை டீப்-சீக் சாட்பாட்டிடம் கேட்டோம். ‘சீனாவில் சுதந்திரமான பேச்சு’, ‘சாட்-ஜிபிடி ஏபிஐ தகவல்கள் பயன்படுத்தப்பட்டதா?’, ‘எது சிறந்த ஏஐ சாட்பாட்’ என்பன போன்ற சில கேள்விகள் இருந்தன. அனைத்திற்கும் ஒரு நடுநிலையான சார்பற்ற பதிலை டீப்-சீக் தந்தது. குறிப்பாக, சீனாவில் சுதந்திரமான பேச்சு என்பது குறித்து கேட்டபோது, ‘சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு மக்களால் சுதந்திரமாக பேச முடியும்,’ என பதிலளித்தது.

சாட்ஜிபிடி Vs டீப்-சீக்

டீப்-சீக் வருகையால் அதிர்ந்துள்ள சிலிக்கான் வேலி நிறுவனங்களுக்கு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலீடுகளை ஊக்குவிக்கவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நேரத்தில் சாட்ஜிபிடி மற்றும் டீப்-சீக் ஆகிய இரண்டு சாட்-பாட் இடையே இருக்கும் வேறுபாடுகளை கண்டுபிடிக்க சில தகவல்களை கேட்டு பார்ப்போம்.

டீப்-சீக் (இடது), ஓபன்-ஏஐ (வலது)
டீப்-சீக் (இடது), ஓபன்-ஏஐ (வலது) (ETV Bharat Tamil Nadu)

சீனாவில் ‘வின்னி த பூ’ (Winnie the Pooh) என்றால் என்ன என்ன?

சாட்ஜிபிடி, ‘வின்னி த பூ’ கதாபாத்திரம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை உடல் ரீதியாக ஒப்பிட்டு கிண்டல் செய்யப் பயன்படுத்தப்படுவதாகவும், அரசியல் நையாண்டியின் அடையாளமாக இது மாறிவிட்டதாகவும் விளக்கியது. இதற்கு மாறாக, டீப்-சீக் சாட்போட், ‘வின்னி த பூ’ என்பது மகிழ்ச்சி மற்றும் நட்பின் அடையாளமாகப் போற்றப்படும் கதாபாத்திரம் என்று கூறிவிட்டு, திடீரென சீன சட்டங்கள் மற்றும் சமூக மதிப்புகளின் கீழ் ஆரோக்கியமான இணையவெளியை பராமரிப்பதில் சீன அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்தியது.

  • தற்போதைய அமெரிக்க அதிபர் யார்?

இரண்டு ஏஐ சாட்-பாட்களுமே கடந்த வாரம் பதவிக்காலம் முடிந்த ஜோ பைடனை தவறாகக் குறிப்பிட்டன. இது அவற்றின் தரவு அக்டோபர் 2023 இல் கடைசியாக புதுப்பிக்கப்பட்டதன் விளைவாக இருக்கலாம். இருப்பினும், பயனர்கள் புதுப்பிக்கப்பட்ட ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்ட தகவல்களை சரிபார்க்க வேண்டும் என்று சாட்-பாட்கள் பொறுப்புடன் நினைவூட்டின.

  • 1989 ஜூன் மாதம் பெய்ஜிங்கின் தியான்மென் சதுக்கத்தில் ராணுவ அடக்குமுறையின் போது என்ன நடந்தது?

டீப்-சீக் சாட்பாட், இது அதன் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று கூறி பதிலளிக்க மறுத்தது. மாறாக, சாட்ஜிபிடி விரிவாக பதிலளித்தது. இந்த நிகழ்வை நவீன சீன வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் சோகமான ஒன்று என்று விவரித்தது. பின்னணித் தகவல்கள், உயிரிழப்புகள் மற்றும் அதன் மரபு உள்பட பல தகவல்களைத் தந்தது சாட்ஜிபிடி

  • அமெரிக்கா-சீனா உறவுகளின் நிலை என்ன?

டீப்-சீக் சாட்பாட் அமெரிக்கா-சீனா உறவுகள் குறித்த சீனாவின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை எதிரொலித்தது. பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பு மற்றும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. சீன வெளியுறவு அமைச்சகத்திலிருந்து வரும் வாக்கியங்களைப் பயன்படுத்தியது. இதற்கு மாறாக, சாட்ஜிபிடி மிகவும் நுணுக்கமான பதிலை வழங்கியது.

இதையும் படிங்க: சாம்சங் கேலக்சி எஸ்25 சீரிஸ்: AI-ன் மாயாஜால அம்சங்களுடன் அறிமுகம்; ரூ.10,000 வரை கேஷ்பேக்!

பொருளாதாரத்தில் ஒன்றோடொன்று சார்ந்திருத்தல், புவிசார் அரசியல் போட்டி மற்றும் உலகளாவிய பிரச்னைகளில் ஒத்துழைப்பு ஆகியவற்றின் சிக்கலான கலவையை விவாதித்தது. மேலும், தென் சீனக் கடல், தைவான் மற்றும் தொழில்நுட்பப் போட்டி மீதான பதட்டங்களை எடுத்துக்காட்டியது.

  • தைவான் சீனாவின் ஒரு பகுதியா?

டீப்-சீக் சாட்போட் தைவான் பண்டைய காலங்களிலிருந்து சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது என்று கூறி சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தியை பிரதிபலித்தது. இதற்கு மாறாக, சீனா தைவானை தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாகக் கூறுகிறது; அதே நேரத்தில் தைவான் தனது சொந்த அரசாங்கம், பொருளாதாரம் மற்றும் ராணுவத்துடன் ஒரு உண்மையான சுதந்திர நாடாக செயல்படுகிறது என்று சாட்ஜிபிடி பதிலளித்தது.

Last Updated : Jan 30, 2025, 4:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.