ETV Bharat / international

மாற்றுத்திறனாளிகளைப் பணிக்கு அமர்த்தியதால் விமான பாதுகாப்பு கேள்விக்குறி...டிரம்ப்பின் புதிய கண்டுபிடிப்பு! - TRUMP BLAMES DIVERSITY HIRING

மாற்றுத்திறனாளி உள்ளிட்ட எல்லோரையும் உள்ளடக்கிய வேலைவாய்ப்பு கொள்கை காரணமாக விமானப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

போட்டோமேக் ஆற்றில் படகில் மீட்பு பணி மேற்கொள்ளும் மீட்புக்குழு
போட்டோமேக் ஆற்றில் படகில் மீட்பு பணி மேற்கொள்ளும் மீட்புக்குழு (Image credits-AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2025, 4:59 PM IST

வாஷிங்டன்: எல்லோரையும் உள்ளடக்கிய வேலைவாய்ப்பு முயற்சிகள் காரணமாக விமானத்துறையில் பேரிழப்புகள் நேரிடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும் விமான விபத்து குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அதிகாரிகள், எந்த ஒரு முடிவுக்கு வரும் முன்பு புலனாய்வு தேவையாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

தொடரும் மீட்புப் பணி: அமெரிக்காவில் 29ஆம் தேதி இரவு நேரிட்ட விமான விபத்தில், விமான பணியாளர்கள் உட்பட அதில் பயணித்த 67 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கான்சாஸின் விச்சிதாவில் இருந்து வந்த விமானம் வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறக்கும் முன்பு நடுவானில் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. விமான நிலையத்தை ஒட்டி ஓடும் போட்டோமேக் ஆற்றில் விமானம் விழுந்திருப்பதால் மீட்பு படையினர் ஆற்றில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஏதும் தெளிவுபடுத்தவில்லை. விபத்து குறித்து கருத்துத் தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப், "விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நாட்டு மக்கள் பிரார்த்திக்க வேண்டும். விபத்து குறித்து அவசரமாக எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாது. உண்மையில் சில மோசமான விஷயங்கள் நடந்து விட்டன. நடக்கக் கூடாது என்று நினைத்த விஷயங்கள் நடந்து விட்டது.

மாற்றுத்திறனாளிகள் நியமனம்: முந்தைய அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் வேலைவாய்ப்பில் அனைவரையும் உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்ட கொள்கையை கடைபிடித்து தீவிர அறிவு சார் குறைபாடு உள்ளவர்கள், மனநல பிரச்னைகள் உள்ளவர்கள், இதர மன நலக்குறைபாடுகள், உடல் நலக்குறைபாடு உள்ளவர்களை விமானப்போக்குவரத்துறை நிர்வாகத்தில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அதே போல கேட்டல், பார்வை குறைபாடு உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் பக்கவாதம், கால்-கை வலிப்பு மற்றும் குள்ளவாதம் கொண்டவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனக்கு பொது அறிவு உள்ளது. எதிர்பாரதவிதமாக பெரும்பாலானோருக்கு பொது அறிவு இல்லை. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் அதிக புத்திசாலித்தனத்துடனும் பாதுகாப்பை உறுதி செய்பவர்களாகவும் இருக்க வேண்டும். வழக்கமான வேலைகளில் ஈடுபடுவோரால் விமானப்போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் பணிகளை மேற்கொள்ள முடியாது. செயலாற்றல் கொண்ட தகுதி வாய்ந்தவர்கள் எங்களுக்குத் தேவை. அவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல. விமான விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளேன்,"என்று கூறியுள்ளார்.

அதிகாரிகள் விசாரணை: மத்திய விமானப்போக்குவரத்துறை நிர்வாகத்தில் எல்லோரையும் உள்ளடக்கிய பன்முகத்தன்மை வேலைவாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் உத்தரவில் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளார். அதே நேரத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கருத்துக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனிடையே அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், "விமான விபத்துக்கு காரணம் குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளது. உண்மையில் என்ன நடந்தது என்பதை பார்க்க வேண்டும். எங்களுடைய விசாரணை முடிவடைய சில காலம் ஆகலாம்,"என வாரியத்தின் உறுப்பினர் ஜெனிபர் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.