ரொம்ப சுலபமா வீட்ல இருக்கிற பிரட்டை வைத்த்து ஈஸியா செய்யக்கூடிய சிக்கன் பிரட் ரோல் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க..
சிக்கன் பில்லிங் செய்ய தேவையான பொருட்கள்:
- சிக்கன் - 1/2 கிலோ
- தண்ணீர் - 1/4 கப்
- எண்ணெய் - 3 தேக்கரண்டி
- பூண்டு - 4 பல்
- இஞ்சி - 1 துண்டு
- பச்சை மிளகாய் - 2
- வெங்காயம் - 1
- குடைமிளகாய் - 1
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- மிளகு தூள் - 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
- தனியா தூள் - 1 தேக்கரண்டி
- சீரக தூள் - 1 தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி இலை நறுக்கியது
- உப்பு - தேவையான அளவு
சிக்கன் பிரட் ரோல் செய்ய தேவையான பொருட்கள்:
- பிரட்
- முட்டை - 2
- பிரட் தூள்
- சிக்கன் பில்லிங்
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
சிக்கன் ரோல் செய்முறை:
- அடுப்பில் குக்கரை வைத்து, சிக்கன், மஞ்சள் தூள், உப்பு, மிளகு தூள், தண்ணீர் ஊற்றி கலந்து 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
- பின்பு சிக்கனை தனியாக எடுத்து நன்கு ஆறவிட்டு, சிக்கனின் எலும்புகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக பிய்த்து கொள்ளவும்.
- இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பிறகு உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
- பின்பு சிக்கன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் கலந்துவிடவும்.
- பிறகு சிக்கன் வேகைத்த தண்ணீரை சேர்த்து வதக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்.
- இப்போது, பிரட்டின் எல்ல பக்க முனைகளையும் வெட்டி பின்பு பிரட் துண்டை லேசாக தண்ணீரில் நனைக்கவும். பிறகு மீதம் உள்ள தண்ணீரினை மெதுவாக அழுத்தி பிழிந்து எடுத்து கொள்ளவும்.
- பின்பு பிரட் துண்டின் நடுப் பகுதியில் தயார் செய்த சிக்கன் பில்லிங்கை வைத்து மூடவும்.
- இதற்கிடையில், ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும்.
- பிறகு தயார் செய்து வைத்த பிரட்டை முட்டையில் தேய்த்து பிரட் தூளில் பிரட்டி வைத்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், அதில் தயார் செய்த சிக்கன் பிரட் ரோலை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான மற்றும் க்ரிஸ்பியான சிக்கன் பிரட் ரோல் ரெடி.
இதையும் படிங்க:
வீடே மணக்கும் டேஸ்டியான குஸ்கா ..பக்குவமாய் இப்படி செய்து பாருங்கள்!
இனி டீ போட்டா ஒரு முறை இப்படி போடுங்க..டீ கடை டீ ரகசியம் இதான்!