ETV Bharat / state

விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனாவுக்கு தவெகவில் முக்கிய பொறுப்பு! - ADHAV ARJUNA

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா, தமிழக வெற்றிக் கழகத்தில் தேர்தல் பிரசார மேலாண்மை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தவெக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்த விஜய்
தவெக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்த விஜய் (Image credits-Etv Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2025, 7:04 PM IST

Updated : Jan 31, 2025, 7:45 PM IST

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து அண்மையில் விலகிய ஆதவ் அர்ஜூனா, அதிமுக ஐடி பிரிவில் இருந்து விலகிய நிர்மல் குமார் உள்ளிட்டோர், விஜய்யை இன்று நேரில் சந்தித்து தவெகவில் இணைந்தனர். இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நடிகர் விஜய் அண்மையில் தமிழகம் வெற்றிக் கழகம் என்ற கட்சியை உருவாக்கி அதற்கு பொறுப்பாளர்கள் நியமித்து வருகிறார். இந்தநிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களை முதல் இரண்டு கட்டங்களாக தமிழக வெற்றி கழகம் கட்சி தலைவர் விஜய் தனித்தனியாக சந்தித்து கட்சி வளர்ச்சி மேம்பாட்டுக்காக எவ்வாறு பணி செய்ய வேண்டும் போன்ற அறிவுறுத்தலை வழங்கி மாவட்டச் செயலாளர்களை அறிவித்தார்.

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை (Image credits-ETV Bharat Tamil Nadu)

ஆதவ் அர்ஜூனாவுக்கு வரவேற்பு: இதனிடையே அதிமுக ஐடி விங்கின் இணைச் செயலாளராக பணியாற்றிய சி.டி.ஆர்.நிர்மல் குமார் அக் கட்சியில் இருந்து விலகிய நிலையில் அவர் பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகம் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அதே போல் அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு பின்பு கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த ஆதவ் அர்ஜுனா பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அலுவலகத்திற்கு வெளியே வந்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

இதன் பின்னர் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதிய நிர்வாகிகள் பட்டியல்: தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்பு ரீதியிலான கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலும், தேர்தல் பிரசாரக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1.ஆதவ் அர்ஜூனா, தேர்தல் பிரசார மேலாண்மைப் பொறுப்பாளர்

2. சி.டி.ஆர். நிர்மல் குமார், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு தலைமைப் பொதுச்செயலாளர்

3. பி.ஜெகதீஷ், தலைமைக் கழக இணைப் பொருளாளர்

4.ஏ.ராஜ்மோகன், கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர்

5. லயோலா மணி என்ற ஏ.மணிகண்டன், கழகக் கொள்கைப் பிரிவு இணைச் செயலாளர்

6, பேராசிரியர் ஏ.சம்பத்குமார், கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்

7,ஜே.கேத்ரின் பாண்டியன், கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்

8. எஸ்.வீரவிக்னேஷ்வரன், செய்தித் தொடர்பாளர்

9. எஸ்.ரமேஷ், இணைச் செய்தித்தொடர்பாளர்

10. ஆர்.ஜெயபிரகாஷ், தகவல் தொழில்நுட்பப்பிரிவு ஒருங்கிணைப்பாளர்

11. ஏ.குருசரண், தகவல் தொழில்நுட்பப்பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

12.ஆர்.ஜே.ரஞ்சன் குமார்,, தகவல் தொழில்நுட்பப்பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

13. ஆர்.குருமூர்த்தி, சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்

14. ஆர்.ராம்குமார், சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

15. பி.வெங்கடேஷ், சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

16. ஆர்.நிரேஷ் குமார் ,சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

17. எஸ்.அறிவானந்தம், சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

இவ்வாறு தவெக தலைவர் விஜய், அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Jan 31, 2025, 7:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.