ETV Bharat / state

நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிகை: உள்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! - HOME SECRETARY

நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய காவல்துறையுடன் இணைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீதிபதி வேல்முருகன், உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்
நீதிபதி வேல்முருகன், உயர் நீதிமன்றம் - கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2025, 6:55 PM IST

சென்னை: சென்னை, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை மிரட்டல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சுந்தர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, அப்போதே முடித்து வைக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காவல் துறையினர் பதிவு செய்யும் வழக்குகளில் புலன் விசாரணை முடிந்ததும், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது தொடர்கிறது. தமிழகம் முழுவதும் பல வழக்குகளில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில்லை என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யக் கோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நிலையில், நீதிமன்றத்தை நாட இயலாத ஏழை மக்கள், நீதியைப் பெற போராட வேண்டியுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றங்கள் உத்தரவிட்டாலும் காவல்துறையினர் அதை பின்பற்றுவதில்லை.
காவல்துறையின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து உள்துறை செயலாளருக்கு தெரியுமா? என இன்று (ஜன 31) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்நார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், உள்துறை செயலாளரை நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, நேரில் ஆஜராவிதில் இருந்து விலக்களிக்க முடியாது. பிற்பகல் 1.30மணிக்கு ஆஜராகவில்லை என்றால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

வாரண்ட்டை எதிர்த்து அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஏன் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது என காரணத்தை அங்கே தெரிவிக்கலாம். மேலும், அதிகாரிகள் மக்களுக்கான கடமையை செய்யவே நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதிகாரிகளின் கடமையில்
நீதிமன்றம் குறுக்கிடாது என தெரிவித்தார்.

இதையடுத்து, அரசு தரப்பில் மாலை ஆஜராக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி 4.30 மணிக்கு உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டார். நேரில் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் வழக்கு மாலை மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உள்துறை செயலாளர் தீரஜ்குமார் நேரில் ஆஜரானார். அப்போது, நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்திய நீதிபதி, அனைத்து மக்களாலும் நீதிமன்றத்திற்கு வரமுடியாது என்பதால், பொதுமக்களும் உதவும் வகையில் விரைந்து தீர்வு காண்பது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

உங்களை வரவழைப்பது நீதிமன்றத்தின் நோக்கமல்ல என தெரிவித்த நீதிபதி, காவல்துறையில் நடப்பதை தெரியப்படுத்துவதற்காகவே நேரில் ஆஜராக உத்தரவிட்டதாகவும், இது போன்ற சிக்கல்கள் காவல்துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் உள்ளதாகவும் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.