ETV Bharat / health

உடலில் நீர்ச்சத்து குறைபாடு? வாரத்திற்கு 2 முறை இந்த காய்கறி சாப்பிடுங்க! - BOTTLE GOURD BENEFITS

உடலை நீரேற்றமாக வைப்பதில் தொடங்கி உடல் எடையை குறைக்க உதவும் சுரைக்காயில் உள்ள பிற நன்மைகள் என்னென்ன என்பதை இந்த பதவில் விரிவாக பார்க்கலாம்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : Jan 29, 2025, 11:58 AM IST

இயற்கையின் நற்குணங்கள் நிறைந்த சுரைக்காய் பெரும்பாலானோர் விரும்பாத காய்கறிகளில் ஒன்றாகவும் பலரது உணவுப் பட்டியலில் அரிதாகவும் காணப்படுகிறது. ஆனால், நமது உணவில் இந்த காய்கறியை சேர்ப்பது உடலுக்கு என்னற்ற நன்மைகளை தருவதாக பல ஆய்வுகளின் முடிவில் தெரியவந்துள்ளது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க..

உடலை நீரேற்றமாக வைக்கிறது: சுரைக்காய் நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்களில் ஒன்றாகும். இதில் கிட்டத்தட்ட 92% நீர்ச்சத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோடைக் காலத்தில் சுரைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதன் மூலம், உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடை தடுக்கிறது. மேலும், உடலில் வெப்பம் உயர்வதால் ஏற்படும் அசெளகரியத்தையும் குறைக்கிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)

சிறந்த செரிமானம்: நார்ச்சத்துகளால் நிறைந்துள்ள சுரைக்காய், செரிமானத்திற்கு உதவியாக இருந்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது. சுரைக்காயில் உள்ள நீர் உள்ளடக்கம் உடலில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் வெப்பத்தை குறைக்க உதவுகிறது. மேலும், இது உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)

தோல் மற்றும் முடி ஆரோக்கியம்: சுரைக்காயில் உள்ள நீர்ச்சத்து, பீனாலிக் பண்பு, வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் தோல் மற்றும் முடி பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்த சுத்திகரிப்பு மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதன் மூலம் சுரைக்காய் இயற்கையான நச்சு நீக்கியாக செயல்படுகிறது. முடி வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பொலிவாக வைக்க உதவுகிறது.

எடை இழப்பு: உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சுரைக்காய் சிறந்த பலனை கொடுக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உள்ளடக்கம் வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து எடை இழப்பிற்கு உதவுகிறது. உணவில் சுரைக்காய் சேர்த்துக்கொள்வது பசியை குறைப்பதன் மூலம் அதிகமாக சாப்பிடுவதை தடுத்து எடையை குறைக்க உதவுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)

அழற்சி எதிர்ப்பு பண்பு: 2023ம் ஆண்டு சயிண்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, சுரைக்காய் வைட்டமின் சி மற்றும் பல அத்தியாவசிய அமினோ அமிலங்களின் சிறந்த மூலமாகும். சுரைக்காயில் உள்ள தியாமின் அழற்சி எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்கிறது. மேலும், இந்த காய்கறி வயிற்றில் ஏற்படும் வீக்கம் போன்ற அசெளகரியங்களை குறைக்கின்றன.

இதையும் படிங்க:

நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாகும் வாழைப்பூ..ஆய்வு சொல்வது என்ன?

சர்க்கரை நோய் முதல் சரும பிரச்சனை வரை: இந்த கீரையை மிஸ் பண்ணாதீங்க!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.