தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

பைல்ஸ் முதல் உடல் எடை வரை கோவக்காயில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்! - KOVAKKAI BENEFITS

கோவக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் பல நன்மைகளை கிடைப்பதோடு, பல நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது. கோவக்காய் தரும் நன்மைகள் என்னென்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பின் மூலம் தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - Getty Images)

By ETV Bharat Health Team

Published : Nov 29, 2024, 3:59 PM IST

சர்க்கரை நோயை குணமாக்கும்:கோவக்காயில் உள்ள கசப்பு தன்மை மற்றும் நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைப்பதால் இது நேச்சுரல் இன்சுலின் என அழைக்கப்படுகிறது. சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள், அடிக்கடி கோவக்காயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

குடல் புழுக்களை தடுக்கும்: ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் கோவக்காயில் நிறைந்திருக்கிறது. இதில் இருக்கக்கூடிய கசப்பு தன்மை வயிற்றில் இருக்கக்கூடிய கொக்கிப்புழு, நாடா புழு போன்ற புழுக்களை அழித்து வெளியேற்றும். அதுமட்டுமல்லாமல், புழுக்களின் முட்டைகளையும் அழிக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடல் புழு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் வாரத்திற்கு ஒரு முறை கோவக்காய் பொரியல் சாப்பிடுவது நல்லது.

வயிறு உப்புசம் நீங்கும்: மாவுச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை நாம் சாப்பிடுவதால், வயிறு உப்புசம் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க, உணவில் கோவக்காய் சேர்த்துக்கொள்ளலாம்.

உடல் எடையை குறைக்கும்: கோவக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, கலோரிகளின் அளவும் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு கோவக்காய் சிறந்த உணவாக இருக்கிறது. கோவக்காய் அடிக்கடி சாப்பிட்டு வர, உடலில் ஆங்காங்கே தேங்கியுள்ள கொழுப்புகள் கரைந்து உடல் எடை இழப்பிற்கு வழிவகுக்கும். அதுமட்டுமல்லாமல், உடலில், இரும்புச்சத்து குறைவதால் ஏற்படும் இரத்த சோகையை முற்றிலுமாக தடுக்கிறது.

இதய ஆரோக்கியம் மேம்படும்: இருதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், இருதய சுவர்கள் சுருங்கி விரிவதற்கு அவசியமாக இருக்கும் பொட்டாசியம் கோவக்காயில் நிறைந்துள்ளது. ஆகையால், இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும்.

பைல்ஸ் பிரச்சனை வராது: கோவக்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம், மலச்சிக்கல், பைல்ஸ், இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் போன்றவை விலகும். குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்கும்.

இதையும் படிங்க:

இடுப்பு கொழுப்பை கரைக்கும் கறிவேப்பிலை..வெறும் வயிற்றில் தினமும் இப்படி சாப்பிடுங்க!

கொழுப்பை குறைப்பது முதல் சரும பிரச்சனை வரை..கொய்யா இலையை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ!

சிறுநீரக கல் முதல் நீரிழிவு வரை ஆல் கிளியர் செய்யும் வாழைத்தண்டு..இப்படி எடுத்துக்கோங்க!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details