ETV Bharat / health

இந்தியாவில் HMPV வைரஸ் பாதிப்பு உறுதி; 3 குழந்தைகளுக்கு பாசிட்டிவ்! - HMPV VIRUS IN INDIA

இந்தியாவில் ஏற்கனவே 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில், அகமதாப்பாத்தில் மேலும் ஒரு குழந்தைக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : Jan 6, 2025, 11:31 AM IST

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ள நிலையில், இந்தியாவில் 3 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, மக்களை பீதியடைய செய்துள்ளது.

கரோனா வைரஸ் போன்ற அறிகுறிகளுடன் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி-HMPV) எனும் புதிய வைரஸ் சீனா வடகிழக்கு மாகாணங்களில் பரவ தொடங்கியது. சிறுவர்களே, இந்த தொற்று பாதிப்பிற்கு அதிகம் ஆளாகிவரும் நிலையில், பெங்களூரில் 8 மாதக் குழந்தைக்கு இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் HMPV வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, மற்றொரு 3 மாத குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு எந்த பயண வரவாறு இல்லை எனவும் தெரியவந்துள்ளது. இருப்பினும், வைரஸின் தீவிரத்தன்மை குறித்தும், சீனாவில் பரவும் வைரஸ் தான் இதுவா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில், குழந்தைக்கு HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக ICMR உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், சிகிச்சை இருந்த 3 மாத குழந்தை டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், 8 மாத குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் பாதிப்பு: இதற்கிடையில், குழந்தையின் குடும்பத்தினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது அகமதாபாத்தில் இரண்டு மாத குழந்தைக்கு HMPV வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது குழந்தை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, சீனாவில் பரவி வரும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் பற்றி அச்சமைடைய தேவையில்லை என மத்திய சுகாதார இயக்குநரகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் HMPV தொடர்ந்து பரவி வருவதால், சுகாதார அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

HMPV வைரஸ் என்றால் என்ன?: சளி, இருமல் என பருவ நிலை மாற்றத்தின் போது மூச்சுகுழாயில் ஏற்படும் இயல்பான அறிகுறிகளை HMPV வைரஸ் கொண்டுள்ளது. குழந்தைகள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களே இந்த மெட்டாப்நியூமோவைரஸால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான HMPV வழக்குகள் லேசான தாக்கத்தை உடையதாக ஆய்வுகள் கூறுகின்றனர்.

அறிகுறியும், தடுப்பு நடவடிக்கையும்: மனித மெட்டாப்நியூமோவைரஸ் மற்ற சுவாச வைரஸைப் போன்றது, இது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஒருவருக்கு இருமல் மற்றும் சளி இருந்தால், தொற்று பரவாமல் இருக்க மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும், அதாவது சுவாச நோய்த்தொற்றுகளைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் பொது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படிங்க: HMPV வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம்..பொது சுகாதார இயக்குநரகம் கொடுத்த நல்ல செய்தி!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.