தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இந்திய ரசிகர்கள் பார்க்காத ஒன்று ‘கோட்’ படத்தில் உள்ளது.. இயக்குநர் வெங்கட் பிரபு மாஸ்கோவில் பேட்டி! - Venkat Prabhu about GOAT - VENKAT PRABHU ABOUT GOAT

G.O.A.T: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் மாஸ்கோவில் படமாக்கப்பட்டுள்ளன என்று மாஸ்கோவில் உள்ள ஊடகத்திற்கு இயக்குநர் வெங்கட் பிரபு பேட்டியளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 6:26 PM IST

சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'கோட்'. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படம் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகின்ற செப்.5ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, லைலா, வைபவ், மோகன், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு ரஷ்யாவில் உள்ள ஊடகம் ஒன்றிற்கு கோட் திரைப்படம் குறித்து பேட்டியளித்துள்ளார். அதில், "மாஸ்கோ பகுதியானது கோட் படத்தில் மிக முக்கிய அங்கமாக திகழ்கிறது. இந்திய ரசிகர்கள் இதுவரை பார்க்காத புதிய பகுதிகளை இப்படத்தில் காட்ட வேண்டும் என்று நினைத்தேன்.

ஒருசில பாலிவுட் படங்கள் மாஸ்கோவில் படமாக்கப்பட்டுள்ளன. ஆனால், நீங்கள் தென்னிந்திய சினிமாவைப் பார்த்தால், நிறைய படங்கள் மாஸ்கோ மற்றும் ரஷ்யாவில் படமாக்கப்பட்டதில்லை” என்று பேசினார். முன்னதாக, கோட் திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக், இரண்டாம் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ரீ ரிலீஸில் சொல்லி அடித்த கில்லி! - Gilli Was The Record Ticket Sales

ABOUT THE AUTHOR

...view details