சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் நவம்பர் 1ஆம் தேதி முதல் புதுப் படங்களின் படப்பிடிப்பு நடக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் தனுஷ் படத்திற்கு கட்டுப்பாடு, அவரது புதிய படங்கள் தொடங்குவதில் தற்காலிக நிறுத்தம், எட்டு வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் திரைப்படங்களை வெளியிட வேண்டும் உள்ளிட்ட முக்கிய முடிவுகளையும் தீர்மானங்களாக நிறைவேற்றி அறிக்கை ஒன்றை தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டது.
இதனைத்தொடர்ந்து தமிழ் திரைப்பட நடிகர்கள் சங்கம், உடனடியாக ஆலோசனை கூட்டத்தை நடத்தி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தங்களுடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்திருந்தது. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது படங்கள் தயாரித்து வரும் தயாரிப்பாளர்களுக்கு சங்கத்தின் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில் "திரைப்படங்கள் வெளியீட்டில் உள்ள சிரமங்களை கலையவும், சிறிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்க வழி செய்யவும், சினிமா வியாபாரத்தில் வரவு குறைந்து செலவு அதிகரித்திருப்பதை ஒழுங்குபடுத்தவும், தேங்கி நிற்கும் திரைப்படங்களை வெளியீடு செய்து வருமானத்திற்கு வழி செய்யவும் திரைப்பட முதலாளிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.