சென்னை: ’குட் பேட் அக்லி’ (good bad ugly) படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் அர்ஜூன் தாஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது.
அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் தற்போது அஜித் நடித்துள்ளார். 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித் வித்தியாசமான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கியது முதல் அஜித்தின் பல கெட்டப்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் குட் பேட் அக்லி எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
Maamey...date locked for VERA LEVEL ENTERTAINMENT 💥💥💥#GoodBadUgly is coming to the BIG SCREENS on 10th April, 2025 ❤🔥
— Mythri Movie Makers (@MythriOfficial) January 6, 2025
#AjithKumar @MythriOfficial @Adhikravi @suneeltollywood @AbinandhanR @editorvijay @GoodBadUglyoffl @SureshChandraa @supremesundar… pic.twitter.com/b9ozq5Ki9x
முன்னதாக குட் பேட் அக்லி திரைப்படம் தொடங்கப்பட்ட போது 2025 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் குட் பேட் அக்லி ரிலீஸ் தள்ளிப்போனது. இதனையடுத்து விடாமுயற்சி ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: கேம் சேஞ்சர் நிகழ்ச்சிக்கு வந்த இரண்டு பேர் பலி... ராம் சரண், பவன் கல்யாண் நஷ்ட ஈடு! - GAME CHANGER PRE RELEASE EVENT
கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ’குட் பேட் அக்லி’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதே நாளன்று தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' திரைப்படமும் வெளியாகிறது.