ETV Bharat / entertainment

கேம் சேஞ்சர் நிகழ்ச்சிக்கு வந்த இரண்டு பேர் பலி... ராம் சரண், பவன் கல்யாண் நஷ்ட ஈடு! - GAME CHANGER PRE RELEASE EVENT

Game changer event: கேம் சேஞ்சர் திரைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய போது விபத்தில் உயிரிழந்த இரண்டு பேர் குடும்பத்தினருக்கு ராம் சரண் 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

பவன் கல்யாண், கேம் சேஞ்சர் போஸ்டர், தில் ராஜு
பவன் கல்யாண், கேம் சேஞ்சர் போஸ்டர், தில் ராஜு (Photo: Film Poster, IANS)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 6, 2025, 4:32 PM IST

ஹைதராபாத்: 'கேம் சேஞ்சர்' திரைப்பட நிகழ்ச்சிக்கு வந்த இரண்டு பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தில் ராஜூ தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’ (Game changer). தமன் இசையமைத்துள்ள ’கேம் சேஞ்சர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது.

தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். கேம் சேஞ்சர் படத்தின் ரா மச்சா மச்சா, DHOP ஆகிய பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கேம் சேஞ்சர் படக்குழு தற்போது இந்தியா முழுவதும் தீவிர புரமோஷனில் ஈடுபட்டுள்ளது. கேம் சேஞ்சர் படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆந்திர துணை முதல்வரும், நடிகர் ராம் சரணின் சித்தப்பாவுமான பவன் கள்யான் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து கேம் சேஞ்சர் நிகழ்ச்சிக்கு வந்து, திரும்பிச் சென்ற போது, காக்கிநாடாவை சேர்ந்த ஆரவா மணிகண்டா மற்றும் தோகடா சரண் ஆகியோர் விபத்தில் சிக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து மருஹ்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து ’கேம் சேஞ்சர்’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் ராம் சரண் சார்பில் 10 லட்ச ரூபாயும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சார்பில் 5 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’கேம் சேஞ்சர்’ படத்திற்கு ரெட் கார்ட்?... தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி வெளியாகுமா? - GAME CHANGER RELEASE ISSUE

ஏற்கனவே ’புஷ்பா 2’ திரைப்பட சிறப்புக் காட்சியில் அல்லு அர்ஜூன் வந்து போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இநந்த விவகாரத்தில் அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து கேம் சேஞ்சர் படத்திற்கும் அதே போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது தெலுங்கு சினிமாத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.