சென்னை: பிரபல சின்னத்திரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் (47) நேற்று உயிரிழந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான மருதாணி, மகாலட்சுமி சிவமயம் , விஜய் டிவியில் பாக்யலட்சுமி உட்பட பல மெகா தொடர்களில் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன். சின்னத்திரையில் 25 வருட கால அனுபவமுள்ளவர். நேத்ரன் பாக்கியலஷ்மி, பொன்னி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி பாய்ஸ் VS கேர்ல்ஸ் சீசன் 2, சூப்பர் குடும்பம் ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் வெற்றி பெற்றுள்ளார்.
இவரது மனைவி தீபாவும் சின்னத்திரையில் நடித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகள் 'சிங்கப்பெண்ணே’ என்ற டிவி தொடரில் நடித்து வருகிறார். நேத்ரன் நடன கலைஞராகவும் அறியப்படுபவர். இந்நிலையில் இவர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதுகுறித்து நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் மகள் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.