ETV Bharat / entertainment

”பா.ரஞ்சித் படங்களுக்கு இனி நான் தான் இசையமைப்பாளர், இது என் கட்டளை” - சந்தோஷ் நாராயணன் கலகல பேச்சு! - SANTOSH NARAYANAN ABOUT PA RANJITH

Santosh narayanan about pa ranjith:’சூது கவ்வும் 2’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சந்தோஷ் நாராயணன் பா.ரஞ்சித் படங்களுக்கு நான் நான்‌‌ இசை அமைப்பேன் எனவும், இது என் கட்டளை எனவும் கூறியுள்ளார்.

சூது கவ்வும் 2 டிரெய்லர் வெளியீட்டு விழா
சூது கவ்வும் 2 டிரெய்லர் வெளியீட்டு விழா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 4, 2024, 10:48 AM IST

சென்னை: நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து கடந்த 2013ஆம்‌ ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’சூது கவ்வும்’. டார்க் காமெடி வகை படமாக வெளியான சூது கவ்வும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது.

சி.வி.குமார் தயாரித்துள்ள இப்படத்தில் மிர்ச்சி சிவா, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வருகின்ற 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் உடன் இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, பா.ரஞ்சித் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

சூது கவ்வும் 2 டிரெய்லர் வெளியீட்டு விழா
சூது கவ்வும் 2 டிரெய்லர் வெளியீட்டு விழா (Credits - ETV Bharat Tamil Nadu)

இவ்விழாவில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “சூது கவ்வும் 2 நல்ல படமாக இருக்கும். தலைவன் சிவா நடித்துள்ளார். சென்னை 28இல் தொடங்கிய நட்பு இன்னும் தொடர்கிறது. அவருடைய திறமை முழுமையாக வெளிப்படவில்லை. வெளிப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ’அட்டகத்தி’ படம் எடுக்க நீண்ட காலமாக சி.வி.குமாரிடம் கேட்டுக்கொண்டு இருந்தேன்.

எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதனை பார்த்து உடனே அழைத்து படம் தயாரித்தார். அட்டகத்தி அவருக்கு லாபகரமான படமாக மாறியது. அதன்பிறகு தான் ’பீட்சா’ தொடங்கினார். சந்தோஷ் நாராயணனின் இசை முதலில் எனக்கு பிடிக்கவில்லை. இன்று அவரது இசை வேறு மாதிரி இருக்கிறது என்றால் அவரது தரம் தான் காரணம். இந்த படம் வெற்றிப்படமாக அமைய வாழ்த்துகள்” என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ”நான் நாளைய இயக்குநர் முடித்த பிறகு தயாரிப்பாளர்கள் தேடி வந்தேன். எனக்கு கதை சொல்ல தெரியாது. எனவே நானே படம் எடுத்துவிடலாம் என்று நினைத்தேன். அட்டகத்தி இசை வெளியீட்டு விழா பார்த்து சி‌.வி.குமாரை பேஸ்புக்கில் தொடர்பு கொண்டு கதை இருப்பதாக சொன்னேன்.

அலுவலகம் வரச்சொல்லி எனது கதையை கேட்டு தயாரிக்க ஒப்புக்கொண்டார். ஜிகர்தண்டா தான்‌ முதலில் எழுதினேன். இது முதல் படமாக உங்களால் பண்ண முடியாது என்றார். பிறகு தான் பீட்சா உருவானது. அவல நகைச்சுவை (Dark comedy) படங்களின் தந்தை நலன் குமாரசாமிதான். 'சூது கவ்வும்' கிளாசிக் படம். எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். சூது கவ்வும் பார்ட் 2 படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்றார்.

இயக்குநர் நலன் குமாரசாமி பேசியதாவது, “சூது கவ்வும் படம் மேஜிக் மாதிரி நடந்துவிட்டது. முதல் முறையாக கதையை படிக்கும் தயாரிப்பாளரை பார்த்தோம். சி.வி. குமார் ஸ்கிரிப்ட் மட்டுமல்ல மனிதர்களையும் ஜட்ஜ் பண்ணுவார். நானே சூது கவ்வும் படத்தை டி.வி.யில் பார்த்தால் பசங்க நன்றாக பண்ணியுள்ளார்கள் என்று பாராட்டும் மனநிலைக்கு வந்துவிட்டேன். வேறு ஒருவர் பார்ட் 2 எடுப்பது சாலச்சிறந்தது” என்றார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியது, “அட்டகத்தி படம் வருவதற்கு முன் எனக்காக ஒவ்வொரு தயாரிப்பாளரிடமும் அழைத்து சென்றது சிவா தான். எனக்கு ஆறுதலாக இருந்தார். சிவாவின் தமிழ் படம் தான் எனது முதல் படமாக இருக்க வேண்டியது. அட்டகத்தி படத்தில் ரஞ்சித் ”எனக்கு உனது மியூசிக் பிடிக்கவில்லை” என்றார். நாட்டுப்புற இசை பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள சொன்னார்.

இதையும் படிங்க: சின்னத்திரை 25 ஆண்டுகள் வெற்றிநடை போட்ட நடிகர் நேத்ரன்; புற்று நோயால் உயிரிழந்தார்!

அதன் பிறகு எனது இசைக்கு மிகப் பெரிய உந்துதலாக இருந்தார். எனது முதல் மூன்று படம் இவர்களுக்கு (பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி) செய்தது பெருமையாக உணர்கிறேன். ஒரு திமிர் வந்த பிறகு படங்கள் சொதப்பியது. அனைவரும் நிறைய படங்கள் எடுக்க வேண்டும். பா.ரஞ்சித் இனிமேல் உங்க படங்களுக்கு நான் நான்‌‌ இசை அமைப்பேன் யாரையும் விட மாட்டேன், இது எனது கட்டளை படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என பேசினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.