ETV Bharat / state

"நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டும் காலம் மலையேறிவிட்டது" - முதல்வர் மு.க.ஸ்டாலின்! - TN CM MK STALIN

அல்லல்படும் மக்களின் வேதனையில் அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாமா என்று சிலர் மலிவான அரசியலில் ஈடுபடுகிறார்கள் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Credits - TN DIPR X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2024, 10:57 PM IST

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.

இதன் பிறகு நிகழ்ச்சி மேடையில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கடந்த வாரம் நடைபெற வேண்டிய இந்த நிகழ்ச்சி என்ன காரணத்திற்காக ஒத்திவைக்கப்பட்டது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் பார்க்க தொடங்கியிருக்கிறோம். வானிலை கணிப்புகளை விட அதிகமான மழை கொட்டி தீர்க்கும் இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களிலும், உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் இந்த மாற்றத்தையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எல்லா நாட்டிலும் நடப்பதுதான் அப்படி என்ற காரணத்தினால், நம்முடைய தமிழ்நாடு அலட்சியமாக இருந்ததில்லை.

நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் உயிரிழப்புகள் பெரிதும் ஏற்படவில்லை என்பது முக்கியம். ஆனால், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் அதிகமான அளவிற்கு மழை பெய்து, பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை, நிவாரணத்தை மழை தொடங்கியதிலிருந்து இப்போது வரைக்கும் தமிழ்நாடு அரசு செய்துகொண்டு தான் இருக்கிறது.

மத்திய அரசிடமிருந்தும் நிதியும் நாங்கள் கேட்டிருக்கிறோம். விரைவில் இந்த பாதிப்பிலிருந்து நிச்சயமாக நாம் மீண்டு வருவோம். கடந்த காலங்களில் மழை, வெள்ளத்தில் தவித்த சென்னையை மீட்டெடுத்திருப்பது போன்று, மற்ற பகுதிகளையும் விரைவாக மீட்டெடுப்போம். ஒட்டுமொத்த தமிழ்நாடும் மீண்டு வரும். இப்போதே சில மாவட்டங்கள் முழுமையாக மீண்டு வந்துக் கொண்டிருக்கிறது.

அல்லல்படும் மக்களின் வேதனையில் அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாமா என்று சிலர் மலிவான அரசியலில் ஈடுபடுகிறார்கள். கடந்த ஆட்சியில், அது எந்த ஆட்சி என்பது உங்களுக்குத் தெரியும். 2015 செயற்கை வெள்ளத்திலும், பல்வேறு புயல்களிலும் சென்னையை வெள்ளத்தில் மிதக்கவிட்டது போன்று, இப்போது நாங்கள் தவிக்க விடவில்லை.

அதற்கு ஃபெஞ்சல் புயலில் நாங்கள் எடுத்த நடவடிக்கைகளும் நம்முடைய பணிகளும் தான் அதற்கு சாட்சி. முன்பெல்லாம் சென்னையில் மழை பெய்தால், உதவி கேட்டு அல்லாடும் நிலையும், தன்னார்வலர்களிடம் உதவி கேட்டு சோஷியல் மீடியாவில் பதிவிடும் நிலையும், எப்போது வெள்ளம் வடியும் என்று காத்திருக்க வேண்டிய நிலையும் இருந்தது.

ஆட்சியாளர்களை களத்தில் பார்க்க முடியாது. அப்படியே வந்தாலும் என்ன பிரச்னை என்றும் தெரியாமல், வாக்காளர் பெருமக்கள் என்று பேசியவர்கள் இருந்தார்கள். மீடியாக்கள் மைக்கை நீட்டினால், பதில் சொல்லாமல், "ப்ளீஸ் விட்டுடுங்க"என்று சொன்னவர்கள் தான் இருந்தார்கள், கடந்த கால ஆட்சியில். தன்னார்வலர்கள் உதவி செய்ய வந்தால், அவர்களை மிரட்டுவார்கள். அவர்கள் வழங்கும் நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டுவார்கள். அந்தக் காலம் எல்லாம் இப்போது மலையேறி விட்டது.

புகார் கொடுப்பவர்களுக்கும் நாங்கள் பணிகளை செய்வோம். நம்மைப்பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கும் பணிகளை செய்வோம். ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல. ஓட்டுபோட மறந்தவர்களுக்கும் நாம் நன்மையை செய்வோம். இது தான் உண்மையான பாராட்டு. இந்த பாராட்டுகள்தான் எதிர்கட்சியை வயிறு எரிய வைத்திருக்கிறது.

ஏனென்றால், எவ்வளவு மழை பெய்தாலும் முதலமைச்சர் தொடங்கி, துணை முதலமைச்சர், அமைச்சர்கள் என்று அனைவரும் களத்தில் வந்து நிற்கிறார்கள். நிவாரண உதவிகளை செய்கிறார்கள். நம்மால் அரசியல் செய்ய முடியவில்லை என்று இப்போது தவிக்கிறார்கள். நம்மை பொறுத்தவரையில் நமக்கு மக்களின் மனசுதான் முக்கியம்.

பொதுமக்கள் முன்வைக்கும் நியாயமான புகார்களை, விமர்சனங்களை அவர்களின் குறைகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு, அதை தீர்க்க செயல்படுகிறோம். நம்முடைய அரசில், மக்களின் குரல் கேட்கப்படுகிறது. உங்களின் தேவைகள் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். அதனால்தான், மழை நின்ற அடுத்த சில நாட்களிலேயே, சென்னையின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான திட்டங்களைத் தொடங்கி வைக்க நாங்களும் நீங்களும் இங்கு வந்திருக்கிறோம்.

இதையும் படிங்க : ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் - தமிழக அரசு தகவல்!

எவ்வளவு பெரிய மழை பெய்தது. முடிந்த அடுத்தநாளே இன்றைக்கு உங்களை சந்திக்க வந்திருக்கிறோம் என்றால், அதைத்தான் நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு முறை வடசென்னை பகுதிக்கு வரும்போது, வடசென்னை வளர்ச்சிக்கான திட்டங்களை செய்யவேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபுவிடம் நான் சொல்லிக்கொண்டே இருப்பேன். ஏனென்றால், தென்சென்னைக்கே சென்றுக் கொண்டிருக்கிறோம்.

வடசென்னையை நாம் ஒரு அக்கறை எடுத்துக்கொண்டு அதன் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க வேண்டும். அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான அறிவிப்பை, கடந்த மார்ச் 14ம் நாள் தங்கச் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், "வடசென்னை வளர்ச்சித் திட்டம்" என்று பெயர் சூட்டி, இரண்டாயிரத்து 96 கோடி ரூபாய்க்கான 87 திட்டப்பணிகளை அறிவித்து தொடங்கினோம்.

தொடங்கி வைத்த எட்டே மாதத்தில், அந்த 87 பணிகளில் 29 பணிகளை முடித்து, இன்றைக்கு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோம். இன்று, வால்டாக்ஸ் சாலையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், 1,383 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 79 புதிய பணிகளையும் தொடங்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

சென்னை எப்போதும் திமுகவின் கோட்டையாக விளங்கிக் கொண்டிருக்கிறது. சென்னையை எப்படி கடந்த காலங்களில் வளர்த்தெடுத்தோமோ, அதேபோன்று, இன்றைக்கு தொடங்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த திட்டங்கள் மூலமாக எதிர்காலத்திற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி, சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம். வந்தாரை வாழவைக்கும் சென்னை, மெரினாவில் உதிக்கும் உதயசூரியனின் ஒளியிலும்; திராவிட மாடல் ஆட்சியின் ஒளியிலும் – ஒளிரும்! ஒளிரும்! ஒளிரும்! ஒளிர்ந்து கொண்டே இருக்கும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.