சென்னை: பிக்பாஸ் வீட்டில் ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்ஸ் டாஸ்கில் தர்ஷிகா, ஜாக்குலின் மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் சீசன் 8 தற்போது 50 நாட்களை கடந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த வார எவிக்ஷனில் சிவக்குமார் வெளியேறினார். மேலும் கடந்த வாரம், நடந்த பொம்மை டாஸ்கில் பல்வேறு மோதல்கள் ஏற்பட்டது.
ஜாக்குலின், ரானவ் இடையே மோதல், சவுந்தர்யா, மஞ்சரி என சண்டைகளுக்கு பஞ்சமில்லை. பிக்பாஸ் இந்த சீசன் ஆரம்பத்தில் சற்று விறுவிறுப்பு குறைவாக இருந்தாலும், தற்போது ஒவ்வொரு நாளும் பஞ்சாயத்து தான். ஆரம்பத்தில் ஆண்கள், பெண்கள் அணி என கோடுகள் கிழிக்கப்பட்டு இருந்ததால் அனைவரும் கப்சிப் என இருந்த நிலையில், தற்போது கோடுகள் அழிக்கப்பட்டதால் போட்டியாளர்களிடையே தினமும் சண்டை தான்.
#Day59 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) December 4, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/FjJ1TsVTRK
அந்த வகையில் இந்த வாரம் ஏஞ்சல் வெர்சஸ் டெவில்ஸ் டாஸ்க் வைக்கப்பட்டது. அதில் இன்று வெளியான ப்ரோமோவில் ஜாக்குலின், தர்ஷிகா இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது. இன்று பிக்பாஸ் இரண்டாவது ப்ரோமோவில் தர்ஷிகா, “நீ டெவிலாக இருந்தால் டெவிலா இரு, என்னை பார்த்து சீ... போ ன்னு சொல்லாத, ஜாக்குலின் உன் வார்த்தை அளந்து பேசு, உன் இஷ்டத்திற்கு பேச இது உங்க அப்பன் வீடு இல்லடி” என ஜாக்குலினிடம் கோபமாக கத்துகிறார்.
#Day59 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) December 4, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/Rq3DdWyYcj
இதையும் படிங்க: நாக சைதன்யா, சோபிதா பிரமாண்ட திருமணத்தில் கலந்து கொள்ளும் திரைப் பிரபலங்கள் யார் தெரியுமா?
#Day59 #Promo3 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) December 4, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/3PbcoErXet
பின்னர் ஜாக்குலினுக்கு ஆதரவாக சவுந்தர்யா, தர்ஷிகாவிடம் சண்டைக்கு செல்கிறார். இது மட்டுமின்றி இன்று எப்போதும் இல்லாத வகையில் 5 ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது. அதில் முத்து, அருண் பிரசாத் இடையேயும் வாக்குவாதம் முற்றுகிறது. பிக்பாஸ் இன்றைய ப்ரோமோக்கள் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Day59 #Promo4 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) December 4, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/O9bvnNmAZY