தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கவின், நயன்தாரா நடிக்கும் படத்தில் இணைந்துள்ள நட்சத்திர நடிகர்கள் யார்? - kavin nayanthara movie - KAVIN NAYANTHARA MOVIE

Kavin nayanthara movie: இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகர்கள் கவின், நயன்தாரா நடிக்கும் படத்தில் பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

கவின் நயன்தாரா புகைப்படம்
கவின் நயன்தாரா புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 6:23 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகரான கவின், கடைசியாக நடித்த டாடா, ஸ்டார் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றியை பெற்றதால் கோலிவுட்டில் நம்பிக்கையானவராக அறியப்படுகிறார். சின்னத்திரையில் இருந்து வந்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். காதல் படங்கள் மட்டுமின்றி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் தமிழ் சினிமாவில் தனியிடம் பிடிப்பார் என்பது ரசிகர்களிடம் கருத்து நிலவுகிறது.

தற்போது கவின் நடிகை நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்த நிலையில், அதனை இருவரும் சமீபத்தில் உறுதி செய்தனர். பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்கும் படத்தில் கவின், நயன்தாரா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

இது கவினின் 8வது படமாகும். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ரொமான்டிக் காமெடி படமாக உருவாகி வருகிறது. இந்த படம் குறித்து இன்று வெளியான அப்டேட்டில் பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்‌ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகர் கவின், இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சிவபாலன் இயக்கும் 'ப்ளடி பெக்கர்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிச்சைக்காரன் வேடத்தில் கவின் நடித்து வெளியான ப்ரோமோ ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது. தனது அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் நடிகர் கவின் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்திவிட்டார் என்றும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'... அப்டேட் வெளியிட்ட ஜிவி பிரகாஷ்! - NEEK first single

ABOUT THE AUTHOR

...view details