சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமானவர் கவின். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி இவரது படமான ’ப்ளடி பெக்கர்’ வெளியானது. பிரபல இயக்குநர் நெல்சனின் உதவியாளரான சிவபாலன் இந்த படத்தை இயக்கியிருந்தார். ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது ’ப்ளடி பெக்கர்’ திரைப்படம்.
ஆனாலும் கவினின் அடுத்தடுத்த படங்கள் மீதான் எதிர்பார்ப்புகள் சற்றும் குறையவில்லை. இந்நிலையில் அடுத்ததாக நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளது. இதனை அந்த படத்தின் தயாரிப்பாளர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் கவினோடு ’அயோத்தி’ பட நடிகை ப்ரீத்தி அஸ்ரானி, நடிகர் பிரபு ஆகியோரும் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்திற்காக நடன இயக்கத்தில் தேசிய விருது வாங்கிய சதீஷ் கிருஷ்ணன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் பீஸ்ட் உட்பட சில படங்களில் நடித்தும் உள்ளார்.
:) ♥️ https://t.co/ssTztupTBd
— Kavin (@Kavin_m_0431) January 22, 2025
ஹரீஷ் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளராக RC பிரனவ் பணியாற்றுகிறார். இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் சில காரணங்கள் அவர் விலகியுள்ளார். ’டாடா’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் அடுத்தடுத்த மாதங்களில் அறிவிப்புகள் வெளியாகும் எனவும் படமானது மார்ச் மாதம் வெளியாகும் எனவும் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ரோமியோ பிக்சர்ஸின் ராகுல். இன்னும் அதிகாரப்பூர்வமாக படத்தின் பெயர் அறிவிக்கப்படாத நிலையில் படத்திற்கு கிஸ் என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இதையும் படிங்க; மார்ச் மாதம் தள்ளிப் போன விக்ரம் படம்... ரிலீஸ் தேதியை அறிவித்த ’வீர தீர சூரன்’ படக்குழு!
அடுத்தடுத்து இயகுநர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படம், நயன்தாராவுடன் நடிக்கும் படம், பொன்ராம் இயக்கும் படம் என வரிசையாக கைவசம் படங்களை வைத்திருக்கிறார் கவின். ஏற்கனவே மார்ச் மாதம் விக்ரமின் ’வீர தீர சூரன்’, மோகன்லாலின் ’எம்புரான்’ ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கபட்டுள்ளன. இந்நிலையில் கவினின் படமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.