மேஷம்: உங்களது தோற்றம் மற்றும் செயல்திறன் காரணமாக அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு புத்துணர்வு பெறவும். இதன் மூலம் நீங்கள் பெரிய அளவில் வெற்றி பெற முடியும்.
ரிஷபம்: இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கும், கோரிக்கை வைப்பதற்கும் சாதகமான நாள் அல்ல. சச்சரவுகள் விவாதங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். சச்சரவுகளை தவிர்க்கவில்லை என்றால், அது உங்களைப் பெரிதும் பாதிக்கும் வகையில் இருக்கும். அதனால் உங்களது புகழும், சுயமரியாதையும் பாதிக்கப்படலாம், ஆகையால் கவனமாக செயல்படவும்.
மிதுனம்: மனதுக்குப் பிடித்த விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உதவி கோரும் மக்களுக்கு உதவ முன்வருவீர்கள். அதனால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களது தாராள மனப்பான்மை காரணமாக, உங்கள் சமூக அந்தஸ்து உயர்ந்து அனைவரது நம்பிக்கையும் பெறுவீர்கள்.
கடகம்: இன்று விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படலாம். அதனால் மனம் வருத்தம் கொள்ளலாம். எனினும் அதை திறமையாக கையாண்டு, பாதிப்பில்லாமல் வெளிவருவீர்கள். வெற்றி என்பது சுலபமான விஷயம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக ஒருவர் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும்.
சிம்மம்: பழைய நண்பர்களை மீண்டும் சந்திக்கவும், புதிய தொடர்புகளை உருவாக்கவும், இன்று சிறந்த நாளாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்கள் வீட்டிற்கு வருகை தரக்கூடும். வீட்டில் சிரிப்பு மழை பொழியும். விருந்தினர்கள் மற்றும் உறவினர்களுக்கு சிறந்த வகையில் விருந்து அளிப்பீர்கள்.
கன்னி: இன்று உங்கள் உறவுகள் மற்றும் தொடர்புகள் மீது உணர்வுகள் ஆதிக்கம் செலுத்தும். உணர்ச்சி ரீதியான பாதிப்பின் காரணமாக நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். எனினும் மற்றவர்கள் கூறும் விஷயத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், உள்ளார்ந்த உணர்வுகளை மதித்து நடந்து கொள்வீர்கள்.
துலாம்: இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, நீங்கள் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருப்பீர்கள். அது பணியில் உள்ள ஈடுபாடு அல்லது குடும்பத்தின் முழு ஈடுபாட்டை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். வர்த்தகத்தில் சிறந்து விளங்குவீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பணிகளையும் சிறப்பாக நிறைவேற்றி, நல்ல முடிவுகளை மேற்கொள்வீர்கள்.
விருச்சிகம்: அன்பு செலுத்துபவர்களுக்காக அதிக அளவில் பணம் செலவழிப்பீர்கள். நமக்கு நெருக்கமானவர்களுக்கு செலவழிக்கும் போது, பணத்தைப் பற்றி நினைக்கக் கூடாது அல்லவா? அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அல்லது பிற இடங்களுக்கு கூட்டிச் செல்லக்கூடும்.
தனுசு: பிரச்சினைகள் அல்லாத குழந்தைப் பருவத்திற்குச் செல்ல விரும்புவீர்கள். திட்டமிடப்படாத சுற்றுலாப் பயணம் போன்றவற்றை மேற்கொள்ள நீங்கள் விரும்பலாம். பழைய நண்பர்களை சந்திப்பதன் மூலம் மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.
மகரம்: பணியிடத்தில் உங்களுக்கு அங்கீகாரமும், பாராட்டுகளும் காத்திருக்கின்றன. சக பணியாளர்கள் உங்கள் வெற்றியைப் பார்த்து பொறாமைப்படாமல் ஊக்கமளித்து மகிழ்வார்கள். இதனால் புதிய பணிகளில் வரும் சாதனைகளில் திறமையாக எதிர்கொள்வீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள், சிறிது காலம் பொறுக்கவும். தற்போது நிலைமை சாதகமாக இல்லை.
கும்பம்: வலியைக் கொடுக்கும் உங்கள் கடவுள், சுகத்தையும் வழங்குவார்கள். இன்றைய நாளின் தொடக்கத்தில், செய்யவேண்டிய பணி அதிகம் இருந்தாலும், இவை அனைத்தையும் ஒவ்வொன்றாகச் செய்து முடித்து விடுவீர்கள்.
மீனம்: தினசரிப் பணியை ஒழுங்குபடுத்த, அதிக முயற்சிகள் எடுத்துக் கொள்வீர்கள். ஆனால், கிரக நிலைகள் சாதகமாக இல்லாத காரணத்தால், நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையாமல் இருக்கும். எனவே, நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தால் நிலைமை தானாகவே சரியாகும்.