ஐதராபாத்:நடிகர் அஜித் குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் ரிலீஸ் குறித்து படக்குழு அப்டேட் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு வந்தது. இந்நிலையில், கேஜிஎப், சலார் படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்த பிரபல இயக்குநர் பிரசாந்த் நீலுடன், நடிகர் அஜித் குமார் இணைந்து இரண்டு படங்களில் பணியாற்றப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு படங்களும் அஜித் குமார் AK64, AK 65 அல்லது AK65, AK66 ஆகிய படங்களாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் விடாமுயற்சி படத்தின் படபிடிப்பில் நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் ஆகியோர் சந்தித்து பேசிக் கொண்டதகாவும், அப்போது அஜித்தின் மூன்று ஆண்டுகள் கால்ஷீட்டை பிரசாந்த் நீல் கேட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது. இதில் முதல் படம் மட்டும் தனி கதையம்சத்துடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.