தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"சாவுக்கு துணிந்தவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை".. தங்கலான் ட்ரெய்லர் வெளியானது! - THANGALAAN TRAILER - THANGALAAN TRAILER

Thangalaan: இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ட்ரெய்லர் போஸ்டர்
ட்ரெய்லர் போஸ்டர் (Credits - STUDIO GREEN X PAGE)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 5:32 PM IST

சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 'தங்கலான்'. இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் பசுபதி, பார்வதி, ஹரி கிருஷ்ணன், இங்கிலாந்து நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ கிரீன் (Studio Green) ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 1900 ஆம் ஆண்டுகளில் கோலார் தங்க வயல் (KGF - Kolar Gold Field) பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றிய படமாக உருவாகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்தியா படமாகவும் உருவாகி வருகிறது.

முன்னதாக, படத்திலிருந்து க்ளிம்ஸ் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று (ஜூலை 10) மாலை 5 மணிக்கு வெளியாகும் என நேற்று படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தங்கலான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

அதில், ”இங்கே பொன் எடுக்குறது நம்ம உயிர நாம எடுக்குறதுக்கு சமம்.. சாவுக்கு துணிந்தவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை..” என்ற டயலாக் இடம் பெற்றுள்ளது. ட்ரெய்லரில் பின்னணி இசையை ஜி.வி.பிரகாஷ் நொறுக்கி உள்ளார் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தங்க வயலில் இருந்து ஆங்கிலேயர்கள் பொன் எடுக்க வரும்பொது அவர்களுடன் சண்டை போடும் விக்ரம் மற்றும் அங்கு வாழும் மக்கள் சந்திக்கும் துயரம், அவர்களின் நிலைமை பற்றிய படமாக இருக்கலாம் என ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இந்த ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் படத்தின் அனைத்து பின்னணி இசைப் பணிகளும் முடிவடைந்துவிட்டதாக எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:இந்தியன் 2 படத்திற்கு தடை கோரிய வழக்கு; கமல்ஹாசன் தரப்பு ஆஜராக உத்தரவு! - Indian 2

ABOUT THE AUTHOR

...view details