தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"யாரும் கவலைப்பட வேண்டாம்".. வைரல் போட்டோ குறித்து மனம் திறந்த ஜாக்கி சான்! - jackie chan viral photo - JACKIE CHAN VIRAL PHOTO

Jackie Chan Viral photo: நேற்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஜாக்கி சான், தனது வயது முதிர்ந்த தோற்றம் குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தனது வயது முதிர்ந்த தோற்றம் குறித்து பதிவிட்ட ஜாக்கி சான்
தனது வயது முதிர்ந்த தோற்றம் குறித்து பதிவிட்ட ஜாக்கி சான்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 4:02 PM IST

சென்னை: பிரபல திரைப்பட நடிகரும், இயக்குநருமான ஜாக்கி சான், நேற்று (ஏப்ரல் 7) தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஜாக்கி சான் என்றாலே அவரது திரைப்படங்களில் பறந்து பறந்து அடிக்கும் சண்டைக் காட்சிகளே ஞாபகத்திற்கு வரும். ஷாங்காய் நைட்ஸ், போலீஸ் ஸ்டோரி, ஷாவ்லின், கராத்தே கிட் என இவர் நடித்த படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

90s கிட்ஸ் வெளிநாட்டு திரைப்படங்களைப் பார்க்க ஆர்வத்தை தூண்டிய நடிகர்களில் அர்னால்டு, சில்வஸ்டர் வரிசையில் இவரும் முக்கியமானவர். இந்த நிலையில், ஜாக்கி சான் நரைத்த முடியுடன் இருக்கும் ஒரு புகைப்படம் சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து, உலகம் முழுவதும் உள்ள ஜாக்கி சான் ரசிகர்கள், ஜாக்கி சானுக்கு ஏதாவது உடல் நல பாதிப்பா, அவர் இவ்வாறு வயது முதிர்ந்து காணப்படுவதற்கு என்ன காரணம் என தங்களது கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து ஜாக்கி சான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நண்பர்கள், எனக்கு இது உங்களுடைய 70வது பிறந்தநாள் என நினைவூட்டினர். ஒவ்வொரு முறையும் இந்த நம்பரை கேட்கும் போது, என் இதயம் ஒரு நொடி நின்று விடுகிறது. எனது மூத்த சகோதரர் சம்மோ ஹங், வயது முதிர்வு என்பது அதிர்ஷ்டமான விஷயம் எனக் கூறினார்.

மேலும், சில நாட்களுக்கு முன்பு எனது சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி எனது உடல் நலம் குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வருவதைக் கண்டேன். நான் இந்த தருணத்தைப் பயன்படுத்தி தெளிவுபடுத்த விரும்புகிறேன். யாரும் கவலைப்பட வேண்டாம். வயதான கதாபாத்திரத்தில் நான் நடித்து வரும் புதிய படத்திற்கான தோற்றம் இதுவாகும்.

அந்த கதாபாத்திரத்திற்கு வெள்ளை முடி, வெள்ளை தாடி மற்றும் வயது முதிர்ந்த தோற்றம் தேவைப்பட்டது. எனக்கு எப்போதும் புதிய விஷயங்களை முயற்சி செய்ய பிடிக்கும். நான் இந்த பொழுதுபோக்குத் துறையில் 62 ஆண்டுகளாக மகிழ்ச்சியுடன் அனுபவித்து, பயணித்து வருகிறேன். ஏனென்றால், நான் இப்போதும் படங்களில் நடித்து வருவது அதிர்ஷ்டவசமான ஒன்று. ரசிகர்கள் அனைவரின் பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:குறி வச்சாச்சு.. ரஜினியின் 'வேட்டையன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Vettaiyan Movie Release On October

ABOUT THE AUTHOR

...view details