சென்னை: தமிழ் சினிமாவில் நகைச்சுவை படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் இயக்குநர் எம்.ராஜேஷ். இவர் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். ரொமான்டிக் காமெடி படங்களை இயக்குவதில் பெயர் பெற்ற இயக்குநர் ராஜேஷ் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘பிரதர்’.
இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ‘பிரதர்’ படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது. வரும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி பிரதர் திரைப்படம் வெளியாகிறது. முன்னதாக இப்படத்தின் முதல் சிங்கிள் ‘மக்காமிஷி’ பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இன்று நடிகர் ஜெயம் ரவி பிறந்த நாளை முன்னிட்டு ‘பிரதர்’ படம் குறித்த ஸ்பெஷல் அப்டேட் வெளியாகியுள்ளது. ‘பிரதர்’ படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜெயம் ரவி நடித்து கடைசியாக வெளியான ’சைரன்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.