தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மீண்டும் கார் பந்தயத்திற்கு திரும்பிய நடிகர் அஜித்! - Ajith Kumar participate in car race - AJITH KUMAR PARTICIPATE IN CAR RACE

2025ஆம் ஆண்டு துபாயில் நடைபெற இருக்கும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் பங்கேற்க இருப்பதாக இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் அறிவித்துள்ளது.

அஜித் குமார்
அஜித் குமார் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2024, 8:53 PM IST

சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடைசியாக துணிவு படம் வெளியானது. இதனை எச்.வினோத் இயக்கியிருந்தார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதனைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி திரைப்படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அஜித் நடிப்பு மட்டுமின்றி கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் ஆர்வம் கொண்டவர். அதுமட்டுமின்றி துப்பாக்கிச் சுடுதல், ட்ரோன் தயாரிப்பிலும் ஆர்வம் உடையவர். ஆரம்ப காலத்தில் கார் பந்தயத்தில் கலந்து கொண்டார். அதன்பிறகு மீண்டும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில் அஜித் மீண்டும் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

இதையும் படிங்க :அஜித்குமாரின் புதிய போர்ஷ் கார்; ஷாலினி இன்ஸ்டா பதிவு... இந்த கார இவரும் வெச்சிருக்கார்?

2025ம் ஆண்டு நடைபெற உள்ள European GT4 Championship பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித் திட்டமிட்டுள்ளார். இதற்காக இங்கிலாந்து, ஐரோப்பா & மத்திய கிழக்கு நாடு அணிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஜான் கொக்கேன், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடிகர் அஜித்குமார் புதிதாக போர்ஷ் 911 ஜிடி3 ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளதாக, அவரது மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details