தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"ரஜினி செட்ல பாட்ஷா மாதிரி இருப்பார்" - வேட்டையன் ஆடியோ லான்ச்சில் நடிகர், நடிகைகள் புகழாரம்! - vettaiyan audio launch - VETTAIYAN AUDIO LAUNCH

இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் ஆடியோ லான்ச்சில், ரஜினியை நடிகர்கள் மற்றும் நடிகைகள் புகழ்ந்து பேசினர்.

வேட்டையன் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் பட போஸ்டர்
வேட்டையன் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் பட போஸ்டர் (Credits - ETV Bharat Tamil Nadu, Lyca Productions X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2024, 9:47 PM IST

Updated : Sep 21, 2024, 8:26 AM IST

சென்னை :இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். லைகா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இதில், அமிதாப்பச்சன், ராணா டக்குபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று(செப் 20) நடைபெறுகிறது. தற்போது டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

மேடையில் நடிகை துஷாரா விஜயன் பேசுகையில், "என்னுடைய கனவை விட இது பெரிய விஷயம். ஜெய் பீம் படத்தை பார்த்து இயக்குநரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டிருந்தேன். ஆனால் அப்போது தெரியாது தலைவர் படத்தில் நான் நடிப்பேன் என்று. இங்கு நான் பேசுவது என்னுடைய படையப்பா மூமண்ட் ஆக பார்கிறேன்.

நான் இன்று இரண்டு விஷயங்களை சாதித்ததாக உணர்கிறேன். ஒன்று தலைவர் முன்னிலையில் பேசுவது, மற்றொன்று எனது அப்பா முதன்முறையாக நான் நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்துள்ளார். வேட்டையன் படத்தில் முதல் நாள் காட்சியே எனக்கு தலைவருடன் இருந்தது. படப்பிடிப்பிற்கு இடையில் தலைவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாலே ஸ்டைலா இருக்கும்" என்றார்.

பின்னர் பாடலாசிரியர் அறிவு பேசுகையில், "நான் முதன்முதலில் காலா படத்தில் பாடல் எழுதினேன். காலா, அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து வேட்டையன் படத்திற்கும் எழுதியுள்ளேன். சாதி மதத்தை கடந்து தலைவரை ரசிக்கிறோம். ஜெய் பீம் படம் மூலம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ஞானவேல். அவர் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி" என தெரிவித்தார்.

இதையும் படிங்க :"வேட்டையன் வித்தியாசமான ஜானர்" - அனிருத் கொடுத்த அப்டேட்! - vettaiyan audio launch

பாடலாசிரியர் சூப்பர் சுப்பு பேசுகையில், "ஹுக்கும் பாடல் கொடுத்ததற்கு நன்றி. அந்த பாடல் எனக்கான பல கதவுகளை திறந்து வைத்தது. இனி அடுத்து யாருக்கு பாடல் எழுதனும்னு எல்லா இன்டர்வியூல கேட்கிறாங்க. என் தலைவர் ரஜினிக்கு பாடல் எழுதினால் எனக்கு போதும்" என தெரிவித்தார்.

மேடையில் நடிகை மஞ்சு வாரியர் பேசுகையில், "நான் இந்த மேடையில் நிற்பதற்கு, முன் தமிழில் நடித்த இரண்டு படங்கள் காரணம். ஒன்று அசுரன் மற்றொன்று துணிவு தற்பொழுது வேட்டையன். ஜெய் பீம் படத்தை பார்த்து உங்களோடு பணியாற்ற வேண்டுமென மிகவும் ஆசையாக இருந்தது. இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.

மனசிலாயோ பாடலை அனைவரும் ரசித்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் எத்தனை மடங்கு இந்த பாடலைக் கேட்டு ரசிக்கிறீர்களோ அதைவிட அதிகமாக நாங்கள் படமாக்கப்பட்டபோது பாடலை கேட்டு, ஆடி மகிழ்ந்தோம்.

ரஜினியை நேரில் பார்த்து இன்ஸ்பயர் ஆகி உள்ளேன். வாழ்க்கையில் என்ன யோசித்தாலும், திட்டமிட்டாலும் எது நடக்க வேண்டுமோ அதுதான் நடக்கும். அது எழுதியிருக்கிறது என எனக்கு கூறி இருந்தீர்கள். அதை மறக்கவே மாட்டேன்.

ரஜினி அவர்களை நேரில் பார்ப்பேன் என கனவில் கூட நினைக்கவில்லை. ஆனால் தற்போது அவரை நேரில் பார்த்துள்ளேன், படத்தில் நடித்துள்ளேன், நடனம் ஆடியுள்ளேன், என்னால் நம்பவே முடியவில்லை. வேட்டையன் உருவாக என்ன காரணம் இருக்கிறதோ அந்த காரணத்திற்கு நான் நன்றி சொல்கிறேன்" என தெரிவித்தார்.

தலைவர் ரஜினி நடந்து நடந்து வரும்போதே 500 டான்சர்களும் கைதட்டுவார்கள். அவருடன் பக்கத்தில் உட்கார்ந்து பேசும்போது எல்லாத்தையும் மறந்து பேசுவேன். ரஜினியிடம் நல்ல ஒரு வைப்ரேஷன் உள்ளது. இந்த பாட்டு மூலமாக 500 டான்சர்ஸ் குடும்பத்திற்கு வேலை கிடைத்துள்ளது நன்றி" என தெரிவித்தார்.

நடிகர் ரக்சன்‌ பேசுகையில், "ரஜினியை பார்த்தேன் என்று சொன்னாலே யாரும் நம்ப மாட்டார்கள். அவர் படத்தில் நடித்திருப்பது ரொம்ப நன்றி. செட்ல பாட்ஷா மாரி இருப்பார். இவ்வளவு நடிகர்களுடன் நடித்திருப்பதே எனக்கு மகிழ்ச்சி தான்" என தெரிவித்தார்.

Last Updated : Sep 21, 2024, 8:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details