ETV Bharat / state

2026 தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி வருவாரா? ஓடி ஒளிவாரா? - அமைச்சர் எ.வ.வேலு கேள்வி! - E V VELU

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காவது வருவாரா? அல்லது ஓடி ஒளிவாரா? என அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எ.வ.வேலு
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எ.வ.வேலு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2025, 8:13 PM IST

சென்னை: மகளிர் பஸ் பயணத்தை ‘லிப்ஸ்டிக் அடித்து விட்டுள்ளார்கள்’ என்று கொச்சைப்படுத்தி ஒட்டுமொத்த மகளிரையும் கேவலப்படுத்தி விட்டார் எடப்பாடி பழனிசாமி என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விமர்சனம் செய்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக சார்பில் வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் களமிறக்கப்பட்டுள்ளார் என திமுக தலைமை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி இப்படிதான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலையும் புறக்கணித்தார். இது தேர்தல் புறக்கணிப்பு அல்ல. பழனிசாமி தலைமை மீதான ஆளுமை அசிங்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சட்டப்பேரவையில் முதலமைச்சரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், பயந்து ஓடிய பழனிசாமி, வெளியே சென்று வழக்கம் போலவே தன் உளறல்களை பேட்டியாக கொட்டியிருக்கிறார். 2017 ஆர்.கே.நகர் இடைத் தேர்தலலில் தொடங்கி 2024 நாடாளுமன்றத் தேர்தல், விளவங்கோடு இடைத்தேர்தல் என தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்றவர்தான் புரட்சித் தமிழர் எடப்பாடி.

2026 சட்டசபை தேர்தலுக்காவது வருவாரா?

இதேபோல், ஈரோடு கிழக்கு தேர்தலிலும் தோற்று, ’11 தோல்வி பழனிசாமி’ என்ற அவப்பெயரை துடைக்க தேர்தலில் போட்டியிடாமல் பழனிசாமி களத்தைவிட்டே ஓடியிருக்கிறார். தன்னுடைய எஜமான் பாஜகவின் ஓட்டு வங்கிக்கு சேதாரம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, பழனிசாமி தேர்தல் புறக்கணிப்பு என்ற கூத்தை அரங்கேற்றியிருக்கிறார். 2026 சட்டசபை தேர்தலுக்காவது வருவாரா? அல்லது ஓடி ஒளிவாரா?

மாணவர்களின் மருத்துவ கனவை சீரழிக்கும் நீட் தேர்வை ஆதரித்து, தனது ஆட்சிக்காலத்தில் பாஜகவுடன் சேர்ந்து கொண்டு துரோகம் செய்தவர் பழனிசாமி. பாஜகவோடு அதிமுக கள்ளக்கூட்டாளி வைத்திருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக விவாகரத்தில் ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என சட்ட மன்றத்தில் முதலமைச்சர் அதிமுகவினரிடம் கேட்டு அவர்களின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தினார். முதலமைச்சரின் கேள்விக்கு பதில் சொல்லாமல், பத்திரிக்கையாளர்களிடம் வீராவேசமாக பழனிசாமி பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர் அறிவிப்பு!

அண்ணாநகர் சிறுமி வழக்கில் அதிமுகவை சேர்ந்தவருக்கு இருந்த தொடர்பை மறைக்க பழனிசாமி நடத்திய கபட நாடகம்தான் யார் அந்த சார்? எனும் வதந்தி அரசியல். தந்தை பெரியாரையே சீமான் கடுமையாக அசிங்கப்படுத்தியிருக்கிறார். அவரை வன்மையாக கண்டிக்காமல் வலிக்காத மாதிரி வார்த்தைகளை விட்டிருக்கிறார் பழனிசாமி.

தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அநீதியான யுஜிசி அறிவிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் போன்ற முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பதான் பாஜகவின் அடியாளான சீமான் இப்படி பேசி இருக்கிறார் என்று பழனிசாமிக்கு புரிந்துள்ளது. அண்ணா திமுக என்னும் பெயரையே அமித்ஷா திமுக அல்லது ஆர்எஸ்எஸ் திமுக என்றோ மாற்றிக் கொள்ளலாம்.

எந்த தகுதியுமே இல்லாமல் குறுக்கு வழியில் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி அந்த முதலமைச்சர் பதவிக்கு சிறுமைதான் சேர்த்தார். தன்மானத்துக்கும் சுய கௌரவத்துக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டுக்கே இழுக்காகவும், அவமான சின்னமாகவும் மத்திய அரசுக்கு கும்பிடு போட்டு அடிமையாகி தமிழ்நாட்டு மாண்பை குலைத்தவர் பழனிசாமி” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.