சென்னை: நடிகர் அஜித்குமார் தற்போது துபாயில் நடைபெற்று வரும் 24H Dubai 2025 கார் ரேஸில் பங்கேற்றுள்ளார். 24 மணி நேரம் நடைபெறும் இந்த கார் பந்தயத்தில் அணியில் இருக்கும் ஓட்டுநர்கள் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் 24 மணி நேரமும் காரை ஓட்ட வேண்டும். ஜனவரி 9ஆம் தேதியில் இருந்து 12ஆம் தேதி வரை இந்த கார் பந்தயம் நடைபெறுகிறது.
இந்நிலையில் நேற்று 24H Dubai 2025 கார் பந்தயத்திற்கு இடையே அஜித்குமார் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில்,”கார் பந்தயத்தில் நிறைய சாதிக்க விரும்புகிறேன். அதற்காக கார் பந்தயங்கள் முடியும் வரை திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை” என அஜித்குமார் கூறியிருந்தார். அதையொட்டி இன்று கார் பந்தய மைதானத்தில் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடியுள்ளனர்.
AK and his fans.
— Suresh Chandra (@SureshChandraa) January 11, 2025
I love them un conditionally. pic.twitter.com/XA3pNbhn6S
மைதானத்தின் சாலைகளிலும் பார்வையாளர்கள் அமரும் இடங்களிலும் பெரும் திரளாக திரண்டிருந்த அஜித்குமாரின் ரசிகர்கள் ஆரவாரத்துடன் காணப்பட்டனர். அஜித்குமாரை தொடர்ந்து உற்சாகப்படுத்தினர். அவரும் அவர்களது ஆரவாரங்களுக்கு புன்னகை மற்றும் கையசைப்பின் மூலம் பதிலளித்துக் கொண்டிருந்தார். பிரபலமல்லாத கார் பந்தய வீரருக்கு குவிந்த ரசிர்களைப் பார்த்து போட்டி ஒளிபரப்பாகும் சேனலின் தொகுப்பாளர் நேரலையில் நடிகர் அஜித்குமாருடன் பேசினார்.
அவரிடம் பேசிய அஜித்குமார், “உண்மையைச் சொன்னால் இத்தனை ரசிகர்கள் கார் பந்தயத்தை பார்க்க நேரில் வருவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் அவர்களை எல்லையில்லாமல் நேசிக்கிறேன். நடிப்பும் கார் பந்தயமும் ஒன்றுதான். இரண்டுமே உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் அதிக உழைப்பைக் கோரும் வேலைகள். நாம் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதில்தான் அடங்கியிருக்கிறது. நான் ஒரே நேரத்தின் இரண்டு வேலைகளைச் செய்வதை வெறுப்பவன். எனது நடிப்பில் ஜனவரி மாதம் ஒரு படமும் ஏப்ரல் மாதம் ஒரு படமும் வெளியாகவுள்ளது. இதன் மூலம் நான் கார் பந்தயங்களில் கவனம் செலுத்துவதற்கான நேரம் கிடைக்கும்” என தெரிவித்தார்.
😍😍😍🕺💃🕺💃 Ak sir #Ajithkumar #AjithKumarRacing #24hdubai #AKRacing #DubaiRaceWeekend #Racing @SureshChandraa pic.twitter.com/VrYQxIoXEr
— Anirudh Ravichander (@anirudhofficial) January 11, 2025
நடிகர் அஜித்குமாரின் ’வேதாளம்’ திரைப்பட பாடலானா “ஆலுமா டோலுமா’ கார் பந்தய மைதானத்தில் ஒலிபரப்பட்டததை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் அனிருத். நடிகர் சிவகார்த்திகேயேன் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்களும் அஜித்குமாரின் கார் பந்தயத்திற்கு இணையதளத்தில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். பொங்கலுக்கு திட்டமிட்டு பின்பு வெளியாகாமல் போன ’விடாமுயற்சி’ திரைப்படம் ஜனவரி மாதமே வெளியாவதை பேட்டியினூடே உறுதி செய்துள்ளார் அஜித்குமார்.
இதையும் படிங்க: ”யார் நம்மை கீழே இறக்க நினைத்தாலும்”... இந்த இரண்டு விஷயங்களை விடக்கூடாது.. நயன்தாரா பேச்சு
இந்த கார் பந்தயத்திற்காக அஜித்குமார் தீவிரமான பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்த நிலையில், சில தினங்களுக்கு முன் பயிற்சின்போது அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது. அதிர்ஷ்டவசமாக அஜித்குமாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. கார் மட்டும் பலத்த சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.