சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ’கேம் சேஞ்சர்’ நேற்று (ஜனவரி 10) மிக பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. படத்தில் ராம் சரணோடு கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் அஞ்சலி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். தமிழின் முன்னணி இயக்குநரான கார்த்திக் சுப்புராஜின் கதைக்கு ஷங்கர் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். தில் ராஜு - ஷிரிஷ் படத்தை தயாரித்துள்ளனர்.
படத்திற்கான புரோமோஷன் பணிகள் அமெரிக்காவிலும் ராஜ முந்திரியிலும் மிக பிரம்மாண்டமாக நடபெற்றிருந்தது. ‘இந்தியன் 2’ தோல்விக்குப் பிறகு ஷங்கரும், RRR பட வெற்றியை அடுத்து மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ராம் சரணும் இணைந்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. அதனால் ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே அதிகமாக இருந்தது. இந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கேம் சேஞ்சரின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
King size entertainment unleashes in theatres 🔥#GameChanger takes a blockbuster opening at the BOX OFFICE 💥💥#BlockbusterGameChanger GROSSES 186 CRORES WORLDWIDE on Day 1 ❤🔥
— Sri Venkateswara Creations (@SVC_official) January 11, 2025
Book your tickets now on @bookmyshow
🔗 https://t.co/ESks33KFP4
Global Star @AlwaysRamCharan… pic.twitter.com/NqiqvscgR8
சாக்னில்க் (Sacnilk) இணையதளம் அறிக்கையின்படி ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் முதல் நாளில் 51.25 கோடி வசூல் செய்துள்ளது. தெலுங்கில் 42 கோடி வசூல் செய்துள்ள ’கேம் சேஞ்சர்’, அதற்கு அடுத்தபடியாக ஹிந்தியில் 7 கோடி வரை வசூல் செய்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழில் 2.1 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. மேலும் கன்னடத்தில் 10 இலட்சமும் மலையாளத்தில் 5 இலட்சமும் வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் படம் 186 கோடி வரை வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் தங்களது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
படமானது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான ’கேம் சேஞ்சர்’ திரைப்படமானது ’புஷ்பா’, ’RRR’, ’பாகுபலி’ போன்ற படங்களின் வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதைவிட குறைவான அளவே முதல் நாள் வசூல் செய்துள்ளது. அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ’புஷ்பா 2’ திரைப்படம் இந்திய அளவில் முதல் நாளில் 175.1 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: பொங்கலுக்கு என்னென்ன பார்க்கலாம்... இந்த வார ஓடிடி புது வரவுகள் என்ன?
அடுத்தடுத்து பொங்கல், சங்கராந்தி என பண்டிகை விடுமுறை நாட்களாக இருப்பதால் படத்தின் வசூல் கூடும் என திரையரங்க உரிமையாளர்கள் கணித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு வெளிவருவதாக திட்டமிடப்பட்டிருந்த அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ வெளியாகாத நிலையில் ’கேம் சேஞ்சர்’ திரைப்படம் தமிழில் 2.1 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதால் திரையரங்க உரிமையாளர்கள் வருத்தத்தில் உள்ளனர்.